உள்ளி-வெள்ளைப்பூடு

உள்ளிப்பூடு உலகில் மிகவும் தொன்மையான, பயிட்டிடபடும் மூலிகையாகும். எழுதப்பட்ட வரலாற்றுக்கு முன்பதாகவே இதன் பவனை இருந்திருக்குறது.ஏறக்குறைய  5000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே மருந்துகளில் உள்ளி சேர்க்கபட்டதாக சமஷ்கிரத பதிவுகள் கூறுகின்ற. சீனர்கள் கடந்த 3000 ஆண்டுகளாக பாவித்து வருகின்றனர்.புராதன காலத்தில்  எகிப்தியர் உள்ளியையும் வெங்காயத்தையும் நோய் தொற்றாது  தடுக்கும் நோக்கில் பயன் படுத்தினர்.பிரமாண்டமான பிரமிட் கட்டட வேலையாட்களின் ஆரோகிதத்தை பேணும் வகையில் போதியளவு உள்ளியை உணவில் சேர்த்தனர்.புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர் Hippocrates உள்ளியை தடிமன் காய்ச்சலுக்கு(Cold Cure)செயலற்றும் மருந்தாக பயன்படுத்திய அதேவேளை,தோற்புண் நோய்த்தொற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தினார்.இரண்டாம் உலகப்போரின்  போது, தொற்று நீக்கியாகவும்,நோய்க்கரணி கொல்லியாகவும் உள்ளியை பயன்படுத்தினர்.மேலும் காயம்பட்ட சோவிய படையினரின் தசையழுகுதலைத்(gangarene) தடுத்து நிறுத்த உள்ளி பயன்பட்டதால் “Russian பென்சிலின்” எனப் பெயர் பெற்றுள்ளது.

பின்வரும் நோய் நிலைகளுக்கும் உள்ளியை பயன்படுத்தலாம்:

சிறுநீர்ப்பைத் தொற்று, புற்றுநோய், நீரிழிவு, காதுக்குழாயில் தொற்று, இதயம் தொடர்பான வருத்தங்கள், உயர் குருதிக்கொழுப்பு(Cholesterol), ஒட்டுண்ணித் தொற்று , முட்டு(Asthma) ,செவிட்டுத்தன்மை,மூச்சுக்குழாய் சளி அடைப்பு , ஈரல், பித்தப்பை கோளாறுகள், குருதிக் குழாயில் ஏற்படும் படிவுகள் போன்றன. உள்ளியை சேர்த்துக்கொள்வதானால் சளி சம்மந்தமான நோய்நிலைகள்,இருமல் போன்றவற்றிற்கு  நிவாரணம் கிடைப்பதோடு, பசியைத்தூண்டும், இதய செயற்பாடுகளை நல்லபடி பேணிவரும்.

உணவுக்கால்வாய்,குடல்,மார்பு ஆகிய இடங்களில் தோன்றும்  புற்றுநோய் பற்றிய ஆய்வுகளில்,மக்களில் உள்ளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டவர்களுக்கு , புற்றுநோய் தோன்றுவது குறிப்பிடத்தக்களவில் குறைவாகவிருப்பதாக அவதானிக்கப்பட்டது.  உள்ளியில்  காணப்படும் தாவர இரசாயனப்  பொருட்கள், பல வகைப்பட்ட புற்றுநோய்க்கலங்களின் வளர்ச்சியை குழப்பிவிடுவதாக காணப்படுகிறது.

உள்ளியில் மிகுந்த அளவில் B6 விற்றமின் காணப்படுவதோடு.விற்றமின் C யும் கிடைக்கிறது. கனியுப்புக்களான பொஸ்பரஸ்,கல்சியம்(Calcium),இரும்பு(Iron),செம்பு(Copper) ஆகிய சத்துக்கள் போதியளவில் காணப்படுகின்றன.

உணவில் உள்ளி சேர்ப்பது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.சமையலில் பொருத்தமான சந்தர்ப்பங்களில் பச்சை உள்ளி அல்லது மாவாக்கப்பட்ட உள்ளியைச் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.(உள்ளியை சமைத்து சாப்பிடுவதனால் பச்சையாக உண்ணும் பொழுது ஏற்ப்படும் வயிற்றெரிவை தவிர்க்கலாம்.). முதிர்ச்சியடைந்த உள்ளிப் பிளிவுகளில்(aged garlic extract), உள்ளியில் காணப்படும் முக்கிய இரசாயனப் பகுதியான allicin ஆகக்குறைந்தது 0.6% காணப்படுகின்றது.

உள்ளிதரும் நன்மைகள் மிகவும் பல. உள்ளி மணம் சற்று சகிக்க முடியாததாக இருந்தாலும். உணவில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய முக்கியமான ஒரு  மூலிகையாகும். மணத்தை   சகிக்காதவர்கள்  மணமகற்றப்பட்ட குழிகைகளை(odourless garlic tablets ) எடுக்கலாம்.

Garlic tablets 60 tablets, £13.55 ஒன்று அல்லது இரண்டு குழிகைகள் நாள்தோறும்.

சிறுநீர்ப்பைத் தொற்று,புற்றுநோய்,நீரிழிவு,காதுக்குழாயில் தொற்று,இதயம் தொடர்பான வருத்தங்கள், உயர் குருதிக்கொழுப்பு,ஒட்டுண்ணித் தொற்று,முட்டு,செவிட்டுத்தன்மை,முச்சுக்குழாய் சளி அடைப்பு , ஈரல், பித்தப்பை கோளாறுகள்,குருதிக் குழாயில்   ஏற்படும்  படிவுகள் அகியவற்ற்ற்றிக்கும் சிறந்த நிவாரணி உள்ளி ஃ வெள்ளைப்பூடு.