எம்மை பற்றி

மருந்து.கொம் இணையத்தளம்

மருந்து.கொம் இணையத்தளம் உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பல விடயங்களை தமிழில் உலகளாகிய தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இணையத்தளம் என நம்புகின்றோம்.

மனிதனுடைய உடமைகளில் உயிரே மிகச் சிறந்தது அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம் வருகின்றது. ஆரோக்கியமற்ற உடலில் வீற்றிருக்கும் உயிரும் பெரிதாக பயனற்றது. ஆரோக்கியம் இல்லாதவனுக்கு வாழ்க்கையால் உண்டாகும் இன்பங்களும் மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. நோய்யென்பது உடலிலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலையாகும். உடலோ மனதோ அல்லது இரண்டுமோ நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களால் எதுவித நற்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடிவதில்லை. இதைத்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்வை, இயற்கையான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தான் ஒருவர்; பேண முடியும். இந்த இணையத்தளத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தர முயற்சிப்போம்.

சம காலத்தில், மக்களில் பலர் ஆங்கில மருந்து வகைகளிலிருந்து கிடைக்கும் பக்க விளைவுகளை காரணமாக அவற்றைப் புறந்தள்ளி இயற்கையான மருந்துகளை நாடிப் பயன்படுத்தி வருகின்றனர். புல நூறு வருடங்களுக்கு முன்பதாகவே அறியப்பட்டு, மருந்து தயாரிக்கப்பட்டு, நோய் குணப்பட்டு கிடைத்த மருந்துச்சேர்மானங்கள் இன்றுவரை எம்மிடையே பேணப்பட்டு வருகின்றன. இவற்றையும் இந்த இணையத்தளத்தில் கொண்டுவர விருக்கின்றோம். மேலை நாடுகள் கூட, மூலிகை ஆராட்சியில் மிகவும் தீவிரம் காட்டிவருகின்றன. உலகில் எவ்விடத்திலாயினும் கிடைக்க கூடிய மூலிகையின் நோய் குணப்படுத்தும் தன்மையை ஆராய்ந்து அதனை மக்களுக்கு மருந்தாக தருகிறார்கள். உலகின் எல்லா நாடுகளிலும் மூலிகைகளின் பாரம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. இணையத்தளம் எனும் விஞ்ஞான விந்தைத் தளத்தினூடாக இவற்றைத் தமிழில் கொண்டு வருகின்றோம்.

எம்மில் பலருக்கு, எமது உடலின் பகுதிகள் தொழிற்பாடுகள் போன்றவற்றில் அடிப்படையான அறிவே இல்லாமல் இருக்கிறது. உடல் கூறுற்றின் அமைப்புகளையும் தொழிற்பாட்டையும் இந்த தளத்தில் கட்டுரைகளாக தரவிருக்கின்றோம்.

மூலிகை வைத்தியர்கள், போசாக்குணவு பற்றிய ஆரோசகர்கள் தமது சிகிச்சை அனுபவம் வாயிலாக கிடைத்த குறிப்புக்களையும், கேள்விகளுக்கு பதில்களையும் இந்த இணையத்தளத்தில் கொண்;டுவரவிருக்கின்றோம்.

இந்த இணையத்தளம் வாயிலாக நேரடித் தொடர்பில் வினாக்களுக்கு விடை தரக் காத்திருக்கின்றோம். மேலும் நீங்கள் மற்றவர்களுக்கு பயன்படும் என நம்பும் கட்டுரைகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றின் தரம் தேர்ந்து தளத்தில் சேர்க்கப்படும்.

இறுதியாக மருந்துப் பொருட்களை வாங்ககூடிய இணையத்தளமொன்றாகவும் உள்ளது. மருந்து.கொம் ஒரு முழுமையான இயற்கை ஆரோக்கிய இணையத்தமாகும்.