என்டோமேற்றியோசிஸ் – Endometriosis

கருப்பையினுள் வழமைக்கு மாறான கலங்களின் வளச்சியே என்டோமேற்றியோசிஸ் ஆகும். இவற்றில் சில கலங்கள் உள்வாயிலில் இல்லாமல் வேறு பகுதிகளிலும் விருத்தியடைந்து வளர்கின்றன. உள்வாயில் உருவான கலங்கள் குறுகிய காலத்தின் பின் வெளியேறுகின்றன. ஆனால் வேறுபகுதிகளில் வளர்ச்சியடைந்த கலங்களுக்கு வெளியேருவதற்கான வழிகள் எதுவும் இல்லாததனால் அவை நாளளவில் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது. அப்போது இவை வேறுபட்ட சில அறிகுறிகளையும் ஏற்படுத்தக்கூடும்.

  • கருப்பையில் பின் பகுதியில் வலி
  • மதவிடையின் போது இடுப்புப்பகுதியில் வலி ஏற்படல் / மாதவிடாய் முழுவதும் விட்டு விட்டு வலி ஏற்படல்.
  • மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப்போக்கு அல்லது கட்டிகளாக வெளியேறல்/ துண்டு துண்டாக வெளியேறுதல்.
  • குமட்டல் /வாந்தி
  • மாதவிடாய் நேரங்களில் மலச்சிக்கல் எற்படல்.
  • மலங்கழித்தல் செயற்பாடுகள் வழமைக்கு மாறாக இருத்தல் (உ+ம்- வலி, pelvic muscles, anal sphincter போன்றன பலவீனமாதல்).
  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • சில சமயங்களில் மலட்டுத்தன்மையும் காணப்படும்.

மாதவிடாய் பொதுவாக அதிகமாக காணப்படும் போது, இரும்பு சத்து-குறைபாடு, இரத்த சோகை என்பன ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். ஒரு பெண்ணுக்கு முழு சூழச்சிக்காலம் 27 நாட்களுக்கு குறைவாக இருந்தாளோ அல்லது மாதவிடாய் காலம் 1 கிழமையின் பின்னும் நீடிக்குமாயின் இரத்த சோகை ஏற்படும் ஆபத்தும் அதிகம் உள்ளது.

கருப்பை திசுக்கள், கருப்பை/ கருப்பை குழி ஆகியன தவிர மாறாக கருப்பையின் மேல், பெல்லோப்பியன் குழாய்கள் , சிறுநீர்ப்பை, குடல், இடுப்பு தளம், வயிற்றறை உறை, கருப்பை தசை போன்றவற்றிலும் வளர்கிறது. இடுப்பு சுற்றுவிரிக்குரிய குழியின் ஆழமான பகுதிகளில் அதிகமாக ஏற்படுகின்றது என நம்பப்படுகிறது. இடுப்பறை பகுதியின் வெளியே பொதுவாக இவை (கருப்பையகத்தின் உள்வைப்புகள்- endometrial implants) ஏற்படமாட்டாது.

பொதுவாக வழமையான மாதவிடாய் சுழற்ர்சியில் தொடர்ச்சியாக ஏற்படும் ஹோர்மோன் மாற்றத்தினால் கருப்பையை கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவாறு தயார் செய்கிறது. அது போன்று சூலில் கருமுட்டை வளர்ச்சியடையவும் துண்டுகின்றது. இச் செயன்முறையின் போது கரு முட்டை வெளியில் வரும் போது அவ் முட்டைகள் விந்துடன் சேரும் செயற்பாடு நடைபெறாவிடின் அவை சிதைந்துவிடுகின்றன இதே சில நாட்களின் பின் மாதவிடாயாக வெளிவருகின்றன.அதே போன்று வெளியில் விருத்தியடைந்த திசுக்களும் ஹோர்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப பதிலளிக்கின்றன, அத் தருணத்தில் அவற்றுக்கு வெளியேற வழி ஏதும் இல்லாததனால் திசுக்கள் சிதைந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அதனால் அதிக இரத்தப்போக்கு, அதிக வலி ஏற்படலாம்.

ஒவ்வொரு மாதமும் இவை விருத்தியடைய தொடங்குகின்றன. அது போன்று புது உள்வைப்புக்கள், திசுக்களையும் உருவாக்குகின்றது. இது அடிவயிற்று பகுதிகளில் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொள்ளும். இதுவே இருமகல் கருப்பை அகமடலத்தின் வலிக்கும் காரணமாகின்றன. கருப்பை விரிவடைவதோடு அடிவயிற்றில் உள்ள உறுப்புகளும் வித்தியாசமான நிலைக்கு தள்ளப்படுகின்றன. இரத்தச்சேர்க்கை காரணமாக தசை/திரவ கட்டிகள் உருவாக்கலாம். Endometrial or சாக்லேட்கட்டிகள் சூலில் பொதுவாக காணப்படுகின்றன. இவை உடையும் போது பார்வைக்கு சாக்லேட் Syrup போன்று காட்ச்சியளிப்பதோடு மிகவும் வலியையும் ஏற்படுத்தும்.

இது உருவாவதற்கான காரணம் சரிவர தெரியாத போதும் PCBs, டையாக்ஸின், அபாயகரமான கழிவுப் பொருட்கள் போன்ற காரணங்களாலும் உருவாகின்றன. பொதுவாக என்டோமேற்றிஸால் துன்பப்படும் பெண்கள் கர்ப்பம் அடைவது குறைவாகவே காணப்படுகிறது. கர்ப்பம் தரிக்காத பெண்களில் 30-40 வீதமானவர்களுக்கு என்டோமேற்றிஸ் காரணமாக அமைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

மகரந்த காய்ச்சல், எக்சிமா, உணவு ஒவ்வாமை போன்றனவும் இதற்கு காரணமாகின்றன. குடும்ப அலகுகளும் இதற்கு காரணமாகின்றன என கூறப்படுகிறது (ஆனால் இது மிகச்சிறிய வீதத்தில் பங்கெடுக்கிறது). ஆய்வுகளின் படி இளம்வயது பெண்களே இதால் துன்பப்படுகின்றனர் என கூறப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் இதை கண்டறிந்து இதற்கான மூலிகை மருந்துகள்,ஊட்டச்சத்துகளை எடுப்பதன் மூலம் வெற்றிகரமாக கட்டுபாட்டில் வைத்திருக்கலாம்.

மூலிகை வைத்தியம்
இந் நோய்க்கான மூலிகை மருந்து தேவைப்படுமாயின் எங்கள் மூலிகை மருத்துவரை நாடுங்கள் உங்களது நிலைகளை பரிசோதித்து /அறிந்து அதற்கேற்றவாறு மருந்துகள் பரிந்துறைக்கப்படும்.