கேள்வி பதில்

நுண்ணுயிர் கொல்லி மருந்தும், உணவு ஏற

நுண்ணுயிர் கொல்லி மருந்தும், உணவு ஏற்றுகொள்ளாமையும்

கேள்வி:

எனது மகன் (வயது:31) சில காலமாக உணவு ஒவ்வாமையால் துன்பப்படுகிறார். உண்டவுடன் கழியல் கூடம் நோக்கி விரைந்து செல்ல வேண்டியுள்ளது. உடல் நிறை குறைவாகவுள்ளது. சோர்வும் களைப்பும் எப்பொழுதும் இருப்பதோடு தடிமன், காய்ச்சல் இலகுவில் பிடித்து விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்து வேறு நோய்க்காக கொடுக்கப்பட்டிருந்தது. இது இவரின் உணவு ஒவ்வாமையை பாதிக்குமோ என சிந்திக்கிறேன். எதாவது வழி சொல்வீர்களா?

பதில்:

மேல் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து பார்க்கும் பொழுது IBS என்னும் நிலையின் ஒரு வடிவமாக இருக்க கூடும். சமிபாடு சம்பந்தமான கோளாறுகளின் பொழுது ஒரு நல்ல மூலிகை வைத்தியர் அல்லது உயிர் சத்து போசாக்குணவு ஆலோசகரை அணுகுவது முக்கியமாகும். இவர் நீண்ட காலமாக நுண்ணுயிர் கொல்லி மருந்து (அண்டி பையோடிக்) எடுத்து வந்தமையால் உணவுக்கால்வாயிலுள்ள நன்மை பயக்கும் பற்றீரியாக்கள் இல்லாததால் சமிபாடு நன்கு நடைபெறுவதில்லை. ஒரு நல்ல வைத்திய ஆலோசனை பெறுவதற்கு முன்பாக, உடனடியாக வயிற்று நோவை குறைத்து வைப்பதற்காக, உணவுக்கால்வாயினுள் நன்மை, தரும் பற்றீரியாக்களை புகுத்துவது முக்கியமாகும். பிரோபயிடிக் (Probiotics) எனப்படுமிவை, வெவ்வேறு தயாரிப்புகளாக கிடைக்கின்றன.

Bio acidoplillus, Bio kult போன்றவற்றை பயன்படுத்தலாம். இத் தயாரிப்புகளில் பற்றீரியாக்களின் செறிவு வேறுபாடு உண்டு. அதிக எண்ணிக்கையில் இருத்தல் நல்லது. Psylliumhnsk என்னும் தாவரப் பொருளானது உணவுக்கால்வாயில் நீர் தொட்டு வீக்கமடைவதனால், மலம் வீக்கமடைவதனால் மலம் கழிக்க வேண்டிய உணர்வை தூண்டுகிறது. Slippery Elm, Marshmallow Root Powder போன்றவை உணவுக்கால்வாய் காயங்களை ஆற்றிவிடுவதாக செயற்படுகிறது. எரிவு தடுக்கப்படுகிறது.

உடலின் சக்தி நிலையை அதிகரிக்க, ச்லோரில்லா(Chlorella) , ஸ்பைருலினா (Spirulina),பார்லி கீரைகள்(Barley Greens) போன்றவற்றை எடுக்கலாம். சில சிறந்த உணவுகள் நன்மைபயக்கும் பற்றீரியாக்களையும் கொண்டிருப்பதனால் இரட்டிப்பான பயன் கிடைக்கிறது.

மேலும் எதாவது சந்தேகமிருப்பின் எம்மைத் தொடர்வு கொள்ளலாம்.

 

மயிர் உதிரவும், தைரோயிட் சுரப்பியும்

மயிர் உதிர்வும், தைரோயிட் சுரப்பியும்

கேள்வி:

எனக்கு வயது 52 ஆகிறது(பெண்). கடந்த ஒரு வருடமாக மயிர் உதிர்கிறது.இது மாதவிடாய் நின்று போனதன் அறிகுறியாக நான் கருதினேன். எனது நண்பிகள் கிளிப்(kelp) என்னும் மூலிகையை எடுக்குமாறு கூறினார்கள் . நான் கல்சியம்(400mg), விற்றமின் C (500MG) எடுத்து வருகிறேன். நான் எடுப்பது போதுமா? எனக்கு அருவுரை கூறுங்கள்?

பதில்:

உங்களின் மயிர் உதிர்வுக்கு  தைரோயிட்  சுரப்பி போதியளவு ஓமோனை சுரப்பதில்லை எனக்கருத இடமுண்டு. இந்த ஒமோனே உடலின் வளர்ச்சி, முதிர்ச்சியடைதல், கலங்களுக்கு சத்தி வழங்கும் தாக்கங்கள் போன்றவற்றை  கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்கிறது. தைரோயிட் சுரப்பியினளவு குறைவாகும் பொழுது, உடல் செயற்பாடுகள் யாவும் மந்தகதியில் சக்தி உற்பத்தி, சீனி, கொழுப்பு, ஆக்கச்சிதைவு, வளர்ச்சி வீதம், இதய துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச வேகம், மூளைக்கூர்திறன்,  கலவி வேட்கை இயங்குவதாக காணப்படுகிறது. இதன் அறிகுறியாக உங்களின் உடல் வெப்பநிலை குறைவடைந்திருப்பதை அவதானிக்கலாம்.

தைரோயிட் ஓமோன் தயரிப்பிற்கு அயோடீன், அமினோ அமிலம் ஆகியன தேவைப்படுகிறது. கெல்ப்(Kelp) என்னும் கடல் தாவரம் அயோடீனை அதிகளவில் கொண்டுள்ளது. மேலும் இது பொற்டாசியம், மக்னீசியம், கல்சியம், இரும்பு ஆகியவற்றையும் செறிவாக கொண்டுள்ளது. கடலுணவுகளான கடல் நண்டு, சிப்பிகள், சர்டின் மீன்கள் (lobsters, oysters, sardines) அகியவற்றிலும்  அயோடீனின்  செறிவு அதிகமாகும்.

அயோடீன் உடலில் நன்கு செயற்படுவதற்கு, தைரோயின் என்னும் அமினோ அமிலம் தேவைப்படுகிறது. உயிர்ச்சத்துகளான E, A, B2, B3, B6, C அகியவற்றுடன் செம்பு, சிங், செலோனியம் போன்றனவும் போதியளவில் தேவைப்படுகிறது. உயிர்ச்சத்துகளை ஒரு நல்ல பல உயிர்ச்சத்தடங்கிய மாத்திரையை எடுப்பதானால் எடுத்து கொள்ளலாம்.

தைரோயிட் சுரப்பி வீக்கமடைந்து இருந்தால் அது ஈரல் செவ்வனே செயற்படவில்லை என்பதன் அடையாளமாகும். மில்க் திச்ட்லே நேட்லே (Milk thistle Nettle)  ஆகிய மூலிகைகள் ஈரலின் செயற்பாட்டை மேம்படுத்தும்.

அயோடீன் செறிந்த தாவர, விலங்கு கடலுணவுகளுடன் கூட உயிர்ச்சத்துக்கள், முட்டை கோசு, ப்ரோக்கோலி, காலே(kale), கிழங்கு பயிர் வகை, புருசேல்ஸ் ச்ப்ருஸ்(Brussels sprruts)  போன்றவற்றை எடுப்பதன் மூலம் தைரோயிட் சுரப்பை மீட்டலாம்.

நீங்கள் தைரோயிட் சம்மந்தமான மருந்துகள் எடுப்பதாயின் தகுந்த வைத்திய ஆலோசனை பெற முன்பு நிறுத்த வேண்டாம்.

 

மொட்டை விழுதல்-மருந்து.கொம்

ஆண்களுக்கு ஏற்படும் மொட்டை விழுதல்

கேள்வி:

எனது மகன் வேகமாக தலைமயிரை இழந்து வருகிறார். இது ஆண்களுக்கு ஏற்படும் மொட்டை விழுதல் போன்று தோன்றுகிறது. இவரது தகப்பனாருக்கோ அல்லது பேரனுக்கோ மொட்டை விழுந்ததுமில்லை, இவளவு வேகமாக மயிரை இழந்ததுமில்லை. மயிரிழப்பைத் தடுக்க எதாவது வழியுண்டா?

பதில்:

நீங்கள் சந்தேகிப்பது போன்று ஆண்களுக்கு ஏற்படும் மொட்டை விலுதலனது ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும்.காலப்போக்கில் தலை முடியின் வேர்கணுக்கள் சிறுத்துப்போக புதிதாக தோன்ற வேண்டிய மயிர்களின் எண்ணிக்கையும்  குறைந்து போகின்றது.இதனால் தலை முடி மெலிந்தும் குறைந்தும் போகிறது.

சராசரியாக  100,000  தலை முடி காணப்படுகின்றது. மயிர்கணுக்களில் உற்பத்தியாகும் மயிர்  3 வருடம் வரையில் வளர்ந்த பின் உதிர்கிறது.நாளொன்றுக்கு 40-120 வரையிலான மயிர்கள் உதிர்ந்து விடுகின்றன.மேலும் ஒரு நேரத்தில் மயிர்களின் வயது வேறுபட்டிருக்கும்.

ஆண் ஓமோனான- Testosterore  ன் சமநிலை குழப்பமும், மயிரிழப்புக்கான காரணமாக அமையலாம். இவற்றுடன் கூட MSM (எம்.ஸ்எம்) , Zine  (ஸின்)  கட்டாயமான கொழுப்பமிலங்கள் (Essential Fatty Acids) போன்றன போதியளவில் தேவைபடுகின்றன. இவற்றை குறைநிரப்புவதால் மயிருதிரும் வேகத்தைக்குறைக்கலாம். மேலும் தாடோச்டேரோன் (Testosteron) ஓமோனின் அளவை சமப்படுத்த றிபுளுஸ்தேர்றேச்ற்றிஸ்  (Tribulus Terrestris)  எனும் மூலிகையை பயன்படுத்தலாம். மூலிகை தயாரிப்பான போ-தி காம்ப்ளெக்ஸ் (Fo-Ti Complex) எனும் மூலிகை கூட்டு மயிர்கணுக்களை உசுப்பி விட்டு புது மயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மூலிகைக்கூட்டை உள்ளெடுக்கும் அதேவேளை   தலைமுடிகளுக்கு பாவிக்கக்கூடிய எண்ணெய் (Hair Oil) ஐ பயன்படுத்தி தலையை தேய்த்து விடுவதனாலும் மயிர் வளர்ச்சியைக் ௬ட்டலாம்.

மயிர் வளர்ச்சிக்கு தேவையான உயிர்சத்துக்கள், தாதுப்பொருட்கள் போன்றன ஒரே தயாரிப்புக்களில் கிடைக்கின்றன. கொழுப்பமிலங்களைத் தரவல்ல மீன் எண்ணெய் வகைகள், உணவூடாகவோ அல்லது குறை நிரப்பியாகவோ எடுக்க வேண்டும்.

மயிருதிர்வும்,மயிர் தடிப்பு குறைவடைவதற்கும் வேறு பல காரணங்களும் இருக்க கூடும்.குருதி சோகை,(இரும்பு சத்து குறைபாடு),தைரோயிட் குறைபாடு போன்றனவும் காரணங்களாகலாம். உங்களின் தனிப்பட்ட ஆரோக்கிய நிலைபற்றி ஆலோசிக்க எம்மைத் தொடர்வுகொள்ளலாம்.

 

சொடுகு நோய்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-01

கேள்வி:

எனக்கு வயது 40 ஆகிறது (ஆண்) கடந்த சில வருடங்களாக சொடுகு நோயால் மிகவும் சங்கடப்படுகிறேன். சிறுசிறு துண்டுகள் போல (செதில்) தலையிலுமி தலைவாரும் போது உடையிலும் கொட்டிவிடுகிறது. சில சமயங்களில் சொறியவும் செய்கிறது. சொறியும் பொழுது தோல் படை நெகிழ இரத்தம் கசியவுமி புண்ணாகவும் செய்கிறது. பல விதமான ளாயா1ழழ களும் பாவித்துப்பார்த்து விட்டேன் வேறேதாவது வழிகளுண்டா?

பதில்:

மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலை பாதிக்கும் தோல் சார்ந்த நிலைகளில் மிகவும் பொதுவானது சொடுகு என்னும் நிலையாகும். தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினி அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படை இவை படை படையாக (செதில் போல) அகற்றப்படும். இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவுமி தலை புண்பட்1டதாகவும் காணப்படும். இந்த செதில் படையுடன் தோல் எண்ணைச்சுரப்புமி அழுக்கும் சேர்ந்து கொள்ளக்கூடும். சில சமயங்களில் தலை மயிரில் மா விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா (ளனடிழசசாழனைஉ நனசாயவவைளை) என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காதுஇ நெற்றி போன்ற இடங்களிலம் தோன்றக்கூடும். 1ளழசயைளளை என்னும் இன்னோர்1 தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது சிவப்பாகிஇ சிறிது வீக்கமடைந்துஇ வெள்ளி கலந்த வெள்ளைத் தகடுகள் போன்றிருக்கும். இது காதுஇ முழங்கால் மூட்டுஇ முழங்கை போன்ற இடங்களிலும் தோன்றும்.

சொடுகு தலைமுடி உதிர்வுக்கு காரணமாக கருதப்படவில்லை. பெண்களைவிட ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது. தலைத் தோலை அருட்டி விடக்கூடிய (கடினமாக தலை வாருதலி நகத்தினால் கீறுதலி நுண்ணங்களின் வளர்ச்சி) போன்றன காரணங்களாகினறன எனக் கருதப்படுகிறது. சொடுகு பிள்ளைகளில் அதிதாகவே காணப்படுகிறது ( 6 – 10 வயது) விடலைப் பருவத்தின் பிற்பாடே அதிகமாக காணப்படு1றது. தலைத் தோலில் ஒரு வகை பங்கசுவின் (1வைலசழளிழசரா ழஎயடை) 1அதிக வளர்ச்சியுமி போதியளவு உயிர்1ச்சத்தின்மைஇ கட்டாயம் தேவையான கொழுப்பமிலக் குறைபாடுகளும் காரணங்களாகலாம். ஒவ்வாமையைத் தரக்கூடிய இரசாயனங்களும் கண்டறியப்பட்டு தவிர்1க்கப்படவேண்டும்.

சொடுகை முழுவதாக அகற்றிவிட முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கிழமைக்கு இரு தடவையாதல் சொடுகை நிறுத்தக் கூடிய (யுவெஇ நயனெசரகக ளாயா1ழழ) ளாயா1ழழ கொண்டு தலை மயிரை நன்கு கழுவவேண்டும். இரசாயனங்கள் கொண்டவற்றைத் தவிர்த்து வனய வசனன ளாயா1ழழ போன்ற இயற்கையான பங்கசு கொல்லி கொண்டவற்றைப் பயன்படுத்தலாம். உயிர்சத்து ‘டீ’ கொண்ட ‘டீ’ ஊழா1டனஒ மாத்திரைகளையுமி கட்டாயம் கொழுப்பமிலங்களையும் எடுக்கவேண்டும். சொறிவைக் குறைக்க ‘ஞரனசௌனசைன் 1டரள’ என்னும் மருந்தையும் பயன்படுத்தலாம். தலை முழுகும் பொழுதுஇ ளாயா1ழழ வை சிறிதளவு நீருடன் கலந்து தலைமுழுவதும் நன்கு பரப்பி 3-5 நிமிடங்கள் வரை ஊறவிட்டுஇ நன்றாக தேய்த்து (அயளளயபன) பின்னரே கழுவி விடவேண்டும்.

இவற்றை விட சிக்கலான நிலை காணப்படுமாயினி நீங்கள் என்னைத தொடர்பு கொள்ளலாம்.

கேள்வி:

எனக்கு வயது 40 ஆகிறது (ஆண்) கடந்த சில காலமாக மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழமைபோல் தினந்தோறும் மலம் கழிப்பது மாறி கிழமையில் மூன்று அல்லது நான்கு தடவைகள்தான் கழிக்கின்றேன். கழிக்கும் பொழுது கடினமாகவுமி நோ வேதனையும் இருக்கின்றது. வயிறு ஊதலாகவுமி பசியின்மையும் காணப்படுகின்றது. எனது வழமையான மலங்களிக்கும் பழக்கத்திற்கு திரும்புவதற்கு ஏதாவது வழிவகை சொல்வீர்களா?

பதில்:

மலச்சிக்கல் அல்லது மலங்கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பலருக்கு இருக்கின்றன. பத்தில் ஒருவருக்கு மலச்சிக்கல் இருப்பதாக காணப்படுகின்றது. மலச்சிக்கல் சமிபாட்டுத் தொகுதியுடன் சார்ந்த பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக நார்ச்சத்து குறைவான உணவுஇ போதியளவு நீர் அருந்தாமை காரணங்களாகின்றன. சில சமயங்களிலி ஓமோன் சுரப்புக்களில் ஏற்படும் மாற்றங்களுமி வேறு நோய்களுக்கு தரப்படும் மருந்துகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும். சிறு பிள்ளைகளுக்குமி வயது முதிர்ந்தோருக்கும் இது பொதுவாக காணப்படுகின்றது. பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்புமி கர்ப்ப காலத்திலும் பொதுவானதாகும்.

தினமும் மலங்கழிப்பதை விடுத்துஇ கிழமைக்கு 3 – 4 தடவைகள் மலங்கழிப்பது மலச்சிக்லைத் குறிக்கும். மேலும் இன்னேரங்களில் மலம் கெட்டியானதாகவும் கழிப்பது கடினமாகவுமி கழிக்கும் பொழுது நோஇ வேதனையுமிருக்கும். சில சமயங்களிலி மலம் முயல் மலங்கழித்தால் (சிறு புழுக்கைகள்) போன்றிருப்பதுடனி மலங்1கழித்த பின்புமி மலம் முழுவதும் கழிக்கப்படாத உணர்வும் இருக்கும். சிறிதளவு உண்டவுடனேயே வயிறு நிறைந்த உணர்வுமி வயிறூதலுமி வாந்திவரும் உணர்வுமிருக்கக்கூடும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு டீனசடினசளை 1டரள என்னும் மூலிகைக் கலவையுமி ஊழவழன் யுழழ என்னும் மூலிகைச் சேர்மானமுமி ளலடடரைஅ ர்ரளம என்னும் மூலிகைத் தூளையும் பயன்படுத்தலாம். டீனசடினசளை 1டரள மருந்துக் கலவை சமிபாடு1 நன்கு நடைபெற உதவுகிறது. ஊழவழன் யுழழ மலமிளக்கியாக செயற்பட 1ளலடடரைஅ ர்ரளம மலத்தினளவை அதிகரிக்கச் செய்து மலம் கழிக்குமுணர்வைத் தூண்டிவிடுமாறு செயற்படுகிறது.

இவற்றுடன் கூடை போதியளவு நீரி நார்ச்சத்து கொண்ட உணவுகளி தினமும் தேகப்பயிற்சி ஆகியன முக்கியமானதாகும். று1ழடன அனயட டிசனயன புதிய காய்கறிகளி நீரளவு கூடிய பழவகைகள் போன்றவற்றில் நீரளவுமி நார்ச்சத்தும் கிடைக்கின்றன.

இவற்றைப் பின்பற்றிய பின்புமி மலச்சிக்கல் தொடருமாயினி நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

கேள்வி:

எனக்கு 44 வயதாகின்றது (பெண்) இரவுவேளைகளில் அதிகமாக வியர்க்கிறது. சில சமயங்களில் காரணமில்லாமலே அழ வேண்1டும் போல் உள்ளது?

பதில்: …Will be available soon..!

மருந்து.கொம் ~ மார்படைப்பு

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-03 (மார்படைப்பு)

கேள்வி:

எனக்கு 45 வயதாகிறது (ஆண்). ஏன்னுடைய நண்பரொருவர் அண்மையில் மாரப்பினால் இறந்து போனார். அவருக்கு ஏறக்குறைய எனது வயதுதான். மார்படைப்பு, இதயம் சம்பந்தமான வருத்தங்களை வருமுன் காப்பதற்கு ஏதாவது வழிவகைகளைப் பின்பற்றலாமா? தயவு செய்து என்ன செய்யலாம் என சொல்வீர்களா?

புதில்:

ஆண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினருக்கு, அவர்களின் இளைப்பாற்றுக் காலத்திற்கு முன்பாகவே இதய நோய் – மாரடைப்பு ஏற்படுகின்றது. மார்படைப்பு தோன்றியவர்களில் மூவரில் ஒருவருக்கு மார்படைப்பு அல்லது ஸ்ரோக் ஏற்படுவதனால் இறப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.

இதைத் தவிர்த்துக் கொள்வதற்கு, உடல் அப்பியாசம் முக்கியமானதாகும், போதியளவு அப்பியாசம் செய்யும் கொழுது மார்படைப்பு தோன்றுவதை அரைவாசியாக குறைக்கமுடியும். அத்துடன் உணவிலும் நிரம்பிய கொழுப்புக்கள், சுத்திகரிக்கப்பட்ட வெல்லம் போன்றவற்றைத் தவிர்;த்து போதியளவு புதிதாக தருவிக்கப்பட்ட பச்சை இலைக்கறி, காய்கறி, பழவகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றுடன் கூட பின்வரும் உயிர்ச்சத்துக்கள், குறை நிரப்பிகள் உதவக்கூடும்.

விற்றமின் ‘ஈ’ 400ஐ.யு நாடிகளின் சுவர்களின் மீள்தன்மையை பேண உதவும். பொட்டாசியம் மக்னீசியம் அஸ்பரேற் – குறைநிரப்பியானது இதயத் தசைக்கு வேண்டிய கனியுப்புக்களின் சமநிலையைப் பேண உதவுகின்றது.

– கோத்தோன் பிளஸ் என்னும் மூலிகைச் சேர்மானம் இதய அழுத்தத்தை சமநிலைக்கு கொண்டுவம் வருவதோடு, நெஞ்சு நோ போன்ற இதயம் சம்பந்தமான நோய் நிலைகளுக்கும் பயன்படக்கூடியது.

– கோமோசிஸ்ரீன் மொடியுலேற்ரஸ் – நாடிக்குழாய்கள் தடிப்படைதலை குறைப்பதாக செயற்படுகிறது. மேலும் விற்றமின் பி6, பி12, போலிக் அசிட் ஆகியனவும் கோமோசிஸ்ரீன் அளவை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்க உதவுகின்றது.

பிக்னோயினோல்- தாக்கம் விளைவிக்கும் கட்டாக்காலி அணுக்களின் (பிறி றடிக்கல்ஸ்) தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் அன்ரி ஒக்ஸ்சிடன்ற்ரைக் கொண்டிருக்கின்றது.

மேற்குறிப்பிட்டவற்றை எடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

குறிப்பு : வேறேதாவது குடும்ப வைத்தியரை தரும் மருந்துகளை நீங்கள் எடுப்பதாக இருந்தால் கட்டாயம் எங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவேண்டும்

 

எக்சிமா நோய் கேள்வி-பதில்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-02

கேள்வி:

எனது ஒன்றரை வயதுக் குழந்தை, நான்கு மாதத்திலிருந்து எக்சிமா நோயால் அவதிப்படுகிறாள். புல விதமான களிம்புகளையும் (கிறீம்களையும்), உடம்பு மேற்பூச்சுக்களையும், குடும்ப வைத்தியர் தந்த மருந்துகளையும் பயன்படுத்தியிருந்தோம். எந்த மருந்துமே பாவிக்கும் பொழுது நோயின் அறிகுறியைக் குறைப்பதை தவிர நிறுத்திவுடன் எக்சிமா மீண்டும் வந்துவிடுகிறது. ஆரம்பத்தில் கை, கால் நாடிப்பகுதிகளில் காணப்பட்டது. கடந்த 6 மாதத்தில் உடல் முழுவதும் பரவி விட்டது. இரவு முழுவதும் கடி வேதனையால் துன்பப்படுகிறாள். எனது குழந்தைக்கு தயவு செய்து ஏதாவது செய்ய முடியுமா?

பதில்:

எக்சிமா என்பது ஒரு வகை தோல் அழற்சியாகும். தோல் வியாதிகளில் 50வீதத்திற்கும் அதிகமான பங்கை இது பிடிக்கிறது. ஆனால் உணவுவகை மாற்றங்களையும், மூலிகை குறை நிரப்பிகளையும் எடுப்பதன் மூலம், கடி வேதனையைக் குறைப்பதோடு, நோய் குணப்படும் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.

முதன் முதலாக உங்கள் குழந்தையின் உணவிலிருந்து பசுப்பால் கொண்ட பொருட்கள், கோதுமைத் தானிய (வீற்) உணவுகள், நொதித்த உணவுகள் (ஈஸ்ற்) ஆகியவற்றை முற்றாக நிறுத்தவேண்டும். இவற்றிற்குப் பதிலாக சோயா பால், குரக்கன் மா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். உணவில் புதிய காய்கறி வகைகள், பழவகைகளோடு கூட, எண்ணெய்த் தன்மை கொண்ட மீன் வகைகளை (உ-ம் ரியுனா, மக்றல்) சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை தோலின் உட்பகுதியை ஈரப்படுத்த உதவுகின்றன. மேலும் கலன்டியுலா அன் கொட்டுக்கொல கிறீம் என்னும் மேற் பூச்சுக் களிம்பையும், எல்ட பிளவர் பிளஸ என்னும் மூலிகைச் சேர்மானத்தையும் ஏடுப்பதன் மூலம், தோல் அழற்சியைக் குறைத்து, குணப்படுதலை அதிகரிப்பதோடு, தோல் சொறிவையும் குறைத்துவிடுகிறது.

இயற்கை மருந்துகள் உடலில் மாற்றத்ததை ஏற்படுத்த சிறிது காலம் தேவைப்படுகிறது. இங்கு 3 – 6 மாத காலத்தின் பின்பே நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

உங்கள் குழந்தை ஏதாவது ஒவ்வாமைக் காரணிகளால் துன்பப்படுவதாக இருந்தால், எந்தக் காரணிகள் இந்த ஒவ்வாமையைக் கொண்டு வருகின்றன என்பதைக் கண்டு கொள்ள உணவு ஒவ்வாமை பரிசோதனை (பூட் இன்ரொலறன்ஸ் ரெஸ்ற்) செய்து கொள்ளலாம். இலகுவாக செய்து கொள்ளக் கூடிய இப்பரிசோதனை மூலம் குழந்தைக்கு ஒவ்வாத உணவுக் காரணியைக் கண்டு கொண்டு, அதை உணவிலிருந்து தவிர்த்துவிடலாம்.

 

வாய் துர்நாற்றம் – மருந்து.கொம்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-04

(வாய் துர்நாற்றம்)

கேள்வி:

எனக்கு 29 வயதாகிறது (பெண்). கடந்த 4 – 5 வருடங்களாக வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கே தயக்கமாகவிருக்கிறது. சில சமயங்களில் முரசிலிருந்து இரத்தம் வருகிறது. என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் சகிக்க முடியாத நாற்றம் காரணமாக முகந் சுழித்து விலகிப்போகும் பொழுது இறந்துவிடுவதே மேல் என்னும் ஓர் உணர்வு – தயவு செய்து ஏதாவது வழி சொல்வீர்க்ளா?

பதில்:

வாய் துர்நாற்றமடிப்பது பலருக்கு அவ்வப்பொழுது வந்து போவதாக இருந்தாலும், நிரந்தரமாகவும், மீண்டுவருவதாக இருப்பதுதான் மற்றவர்களுடன் பேசும்பொழுது அசௌகரியமமான நிலையை ஏற்படுத்துகின்றது. வாய் நாற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை இலகுவாகவும் இயற்கையான முறையிலும் தீர்த்துவிடலாம்.

சுத்தமான வாய்க்குழியைப் பேணுவதே வாய் நாற்றத்தை தவிர்ப்பதற்கான முதற்படியாகும். வுhய்க்குழியிலமைந்த பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். உணவின் சிறு துண்டுகள் தங்கும் பொழுது அதில் பற்றீரியா தாக்கமேற்பட்டு சிதைவடையும் பொழுது துர்நாற்றம் வரும் வாய்ப்புண்டு. தினமும் இரு வேளை நன்கு பல் துலக்கியினால் நன்றாக துலக்கி சுத்தம் செய்வதோடு, நாவையும் (மென்மையான பல் துலக்கியினால்) வழித்து விட வேண்டும். நாளுக்கு ஒரு தடவையாதல் நாவை வழித்துவிட வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்பும் பல்துலக்குவது மிகவும் நன்மைபயக்கும். ஆனால் இது நடைமுறைச்சாத்தியம் குறைந்ததாகையால் வாய் நிறைய தண்ணீரை எடுத்து நன்றாக அலசி கொப்பளித்துவிடலாம்.

புல் துலக்கியை இரு மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றவேண்டும். செயற்கை பல் வரிசையை பயன்படுத்துபவராக இருந்தால், அவற்றை கிரமமாக, நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும். கரட், அப்பிள், சிலறி போன்றன பற்களில் ஏற்படக்கூடிய படிவுகளை தடுக்கவல்லன.

வருடத்திற்கு இரு தடவையாதல், பல் வைத்தியரைக் கொண்டு பற்களை சுத்தம் செய்வதோடு, பற்களின் ஆரோக்கிய நிலையினையும் தெரிந்து கொள்ளவேண்டும். முரசிலிருந்து இரத்தம் வடிவதாக இருந்தால், அது வாய் நாற்றத்திற்கு காரணமாக இருப்பதோடு பற்சூத்தை, பற்களுக்கடியான கட்டிக்கும் காரணமாகிறது.

சில உணவுகளும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம். உள்ளி, வெங்காயம், புளு சீஸ், காரமான, வாசனைத் திரவியம் சேர்த்த இறைச்சிக் கறிவகைகள், சில வகை மீன்கள், மதுபானங்கள், பியர். வயின், விஸ்கி, கோப்பி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சில நோய் நிலைக்கான மருந்துகளும், சமிபாட்டுக் குழறுபடிகளும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம்.

இந்நிலைக்குப் பயன்படக் கூடிய சில:

பேர்பெறிஸ் பிளஸ் – மூலிகைச் சேர்மானம் – சமிபாட்டை ஊக்குவித்து, உணவுத் தொகுதி கழிவகற்றலை மேம்படுத்துகிறது. பெப்பமின்ற் ஒயில் – 10 துளிகளை 100மி.லீ நீரில் கலந்து வாயை அலசி கொப்பளிக்கப் பயன்படுத்தலாம்.

வி.எம்-75 குறைநிரப்பி வேண்டிய உயிர்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதனால் (விற்றமின் ‘பி’) நரம்புத் தொகுதிக்கு ஊக்கம் கொடுப்பதாக செயற்படுகிறது.

பயோ குயிநோன் 10 – முரசை வலுப்படுத்துதோடு. இரத்தக் கசிவையும் குறைக்கவல்லது.

 

ஆண்களுக்கு – கேள்வி-பதில்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-05 (ஆண்களுக்கு)

கேள்வி:

எனக்கு வயது 55 ஆகின்றது (ஆண்). நல்ல உத்தியோகம் பார்கிறேன். திருப்தியானதொரு வாழ்விற்கு வேண்டியன யாவும் போதியளவு இருக்கின்றன. ஆனால் கடந்த 7 – 8 மாதங்களில் எனது உடலுறவு வேட்கை முன்னர் போலில்லாதிருப்பதை அவதானிகின்றேன். ஆணுறுப்பு விறைப்படையக் கூடியளவு நேரம் எடுப்பதோடு, விறைப்பை தக்க வைக்க முடியாமலுமிருக்கிறது. இந்நிலையானது எனக்கும் மனைவிக்கும் இடையே மனஸ்தாபத்தை உருவாக்கிவிட்டது, வீட்டில் சந்தோசமாக இல்லாத மனநிலை, இதனால் வேலையிலும் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலைக்கு ஏதாவது இயற்கையான மருந்துகள் இருநதால் சொல்வீகளா?

பதில்:

ஆம், இயற்கையான மருந்துகள் அல்லது குறைநிரப்பிகள் இருக்கின்றன. இவற்றை நீங்கள் எடுத்துப்பார்க்கலாம். எனது அனுபவத்தில் இந்நிலை கண்ட பல ஆண்களை சிகிச்சைக் கூடத்தில் சந்தித்திருக்கின்றேன். இவர்களுக்கு, இரு குறைநிரப்பிகளை சிபார்சு செய்வேன். முதலில், மக்கா எனப்படும் ஒரு மூலிகைத் தயாரிப்பை பயன்படுத்தலாம். இத்தயாரிப்பானது ஒருவரின் இயற்கையான ஓமோன் சுரப்பைத் தூண்டுவதாக செயற்படுவதனால், காமவேட்கையை அதிகரிக்கிறது. இரண்டாவதாக, பிறிலொக்ஸ் எனப்படும் தயாரிப்பைக் குறிப்பிடுவேன். இத்தயாரிப்பு எல் – ஆயினின்;, பிக்கோயினோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவையிரண்டுமே, ஆரோக்கியமான குருதிக் கலன்களைப் பேணுவதற்கும், ஆண்குறியின் விறைப்பைப் பேணுவதற்கு வேண்டிய குருதியை விரைவாக அனுப்பி, நீண்ட நேரம் தங்க வைப்பதற்கு முக்கியமாக வேண்டியவையாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட மூலிகை அல்லது குறைநிரப்பிகளுடன் கூட, உங்களின் உணவிலும் கவனஞ் செலுத்த வேண்டும். உணவில் போதியளவு விதைகள், கொட்டைகளையும், நல்ல பச்சை நிற இலைக்கறி வகைகள், போதியளவு புரதம் தரக்கூடியவற்றையும் ( உ-ம் மீன், கோழி இறைச்சி போன்றன) சிரமமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள், உங்களின் குடும்ப வைத்தியர் தரும் மருந்துகளை எடுப்பதாக இருந்தால், என்னைத் தொடர்பு கொண்டால், இம்மருந்துகளை அல்லது குறைநிரப்பிகைள அவற்றுடன் சேர்த்து எடுக்க முடியுமா எனக் கூறுவேன். இம்மருந்து அல்லது குறைநிரப்பிகளை 2 – 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக எடுக்கும் பொழுதுதான் மிகுந்த நன்மை பெறலாம்.

 

மனவுளைச்சல் கேள்வி-பதில்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-06 (மனவுளைச்சல்)

கேள்வி :

எனது மகள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறாள். அவள் அதிகம் மன உளைச்சiலுக்கு ஆட்பட்டிருப்பதால், அவள் படிப்பில் ஊன்றிக் கவனம் செலுத்த முடியாமலிருக்கிறாள். கடந்த இரு மாதங்களில், ஒழுங்கான நித்திரை கொள்ள முடியவில்லை அத்துடன் அடிக்கடி தலையிடியும் வந்திருந்தது. அவரின் துன்பத்தைப் பார்க்க சகிக்க முடியவில்லை. இந்த நிலைக்கு உதவக்கூடிய ஏதாவது சிபார்சு செய்வீர்களா?

பதில்:

மனவுளைச்சல் என்பது மனதுக்கு கடுமையான வேளைகளில், அதைத்; தாங்கிக் கொள்ள இயல்பாக ஏற்ப்படும் ஓருணர்வாகும். இந்த உணர்வு குறைந்த அளவிலிருக்கும் பொழுது, அது உங்களை போதியளவு தூண்டி காரியங்களைத் திறம்பட செய்து முடிக்க உதவுகிறது. அளவுக்கதிமாகும் போது அது பெரும் பிரச்சைனயாகிவிடுகிறது.

மயின்ட் எனப்படும் இலண்டன் உள ஆரோக்கியம் பற்றிய ஸ்தாபனம், மனவுளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் வெளியடையாளங்களைப் பற்றி கூறுகிறது. இவர்களுக்கு தலையிடி, பசியின்மை, எப்பொழுதும் களைப்பு, நோயுற்றதான உணர்வு, மனவமைதிகொள்ள முடியாத நிலை போன்றவற்றோடு, அமைதியான நித்திரை கொள்ள முடியாத நிலை, மிக சடுதியில் கோபம் கொள்ளுதல், அதிகமாக மதுவருந்துதல் அல்லது புகை பீடித்தல், என்ன ஏது செய்யவதறியாத நிலை (பனிக்) ஆகியனவும் காணப்படுவதாக அறிவிக்கிறார்கள்.

பரீட்சைப் பயப்பீதியை குறைப்பதற்கு, நீங்கள் பரீட்சைக்கு நன்றே, ஆயத்தம் செய்யவேண்டும். பரீட்சைக்கு முன்பதாகவே, பரீட்சைக்கான மீட்டலுக்கான நேர அட்டவணையை ஒழுங்கு செய்வதோடு, அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும். உங்கள் ஆசிரியரிடம் கேட்டு, கடந்த வருட அல்லது மாதிரி வினாத்தாட்களை பெற்று, அவற்றிற்கு விடையெழுதி வினாத்தாளை விடையெழுதுதலில் போதியளவு அனுபவம் பெறவேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது வினாவின் வடிவம், விடை எழுதும் அனுபவம், நேர நிபந்தனைக்குள் எழுதுதல் போன்றவற்றில் பரீட்ச்சயம் கிடைக்கிறது. பரீட்சை நாளில் மனத்திடனுடன் எழுதலாம்.

மூளை இளைப்பாற்றுக்கான (றிளைக்ஸ்) நேரத்தை ஒதுக்கவேண்டும். இவ்வேளையில் பிடித்தமான ஒரு புத்தகத்தை வாசிக்கலாம் அல்லது பிற்பகலில் நீண்ட நேரம் குளியல் தொட்டியில் குளிக்கலாம். போதியளவு இளைப்பாறினால் நீங்கள் எடுத்த காரியத்தில் நன்றே செயலாற்றலாம். நன்றாகவே செய்யவேண்டும் என்ற உணர்வு மனதில் எப்பொழுதும் மேலோங்கி இருக்கவேண்டும். பரீட்சைகள் முழுவதும் அல்ல, முற்றும் அல்ல – பரீட்சையில் நன்றே செய்தேன் என்னும் உணர்வே போதியதாகும். போதியளவு உடல் அப்பியாசம் – மேன்மை நோக்கிய மனநிலையைத் தருகின்றது.

ஆமைதியான தூக்கமும், ஒழுங்கான ஆரோக்கியமான உணவும் மிகவும் அவசியமானதாகும். ஏதாவதொரு எல்லா உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் அடங்கிய, குறிப்பாக உயிர்ச்சத்து’பி’ அளவு கூடிய மாத்திரை எடுப்பது நன்மைபயக்கும். இவை சக்தி உற்பத்திக்கும், மூளை, நரம்புத் தொகுதியின் செயற்பாடுகளுக்கும் அவசியதாகும். மூலிகை சேர்மானத் தயாரிப்பான ‘அஸ்வக்கந்தா கெம்பிளைக்ஸ்’ மனவுளைச்சலை சமாளிக்கவும், கவனப்புலத்தை குவிக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் செய்யக்கூடிய மூலிகைகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை உடலின் செயற்பாடுகளுக்கான அரிதினல் சுரப்பியின் செயற்பாடுகளுக்கும் உதவுகிறது. இவற்றுடன் கூட நல்ல மீன் எண்ணெய குறை நிரப்பிகளில் ஒன்றான ‘ரோட்ரல் ஈ.எவ்.ஏ’ என்பதும் ஆரோக்கியமான மூளையின் செயற்பாட்டிற்கு முக்கியமானதாகும்.

 

மகப்பேறின்மை கேள்வி-பதில்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-07 (மகப்பேறின்மை)

கேள்வி:

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்து எப்படி?

பதில்:

எனது சிகிச்சைக் கூடத்துக்கு குழந்தையொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பல் வருகின்றார்கள். ஏறக்குறைய 60வீதமான ஐரோப்பா வாழும் புலம்பெயர்ந்த பெண்களிலே மகப்பேறின்மைநிலை காணப்படுகின்றது. இது பெரும்பாலும் உடலில் சுரக்கப்படும் ஓமோன்களின் சமநிலைக் குழப்பம் காரணமாக மாதவிடாய்ச் சக்கரம் ஒழுங்கீனமாக நடைபெற முட்டை குறைவாகவே வெளிவருகிறது. சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாட்டில் வாழ்வதால் ஏற்ப்படும் மனவழுத்தமும் உடலில் ஏற்ப்படும் பாதிப்புக்களுமே காரணமென எண்ணுகின்றேன். புகலிட நாடுகளில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களில சிக்கித் தவிக்கும்போது இவை தவிர்க்கமுடியாகவாறு உடல், உளத் தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றன. இந்நிலை நீடிக்கும்போது நோய்நிலை தோன்றுகின்றது. இங்கு நான் மகப்பேறின்மையை ஒரு நோய்நிலையென எவ்வகையிலும் குறிப்பிடவில்லை, ஆயினும் இது எமது புகலிட நாட்டு வாழ்க்கை முறையினால் கிடைக்குமொரு இயல்பற்ற வாழ்க்கை முறையென்றே குறிப்பிட விரும்புகின்றேன். ஏனெய 40வீதம் மகப்பேறின்மைக்கு ஆண்களில் காணப்படும் விந்தெண்ணிக்கைக் குறைவு, ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு போன்றன காரணங்களாகலாம். மேலும் புகலிட நாடுகளில் எமது உணவுகளில் மாற்றம், முன்தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல, அதகளவில் சிவப்பு இறைச்சி, சீனி மற்றும் மதுபானம், ஏனைய செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பானங்கள், காற்றூட்டப்பட்ட பானங்கள் போன்றன எமது சமூதாயத்தில் மகப்பேறின்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

புகலிட நாடுகளில, உழைப்பதற்காக ஆண்கள் நீண்டநேரம் வேலைத்தளங்களிலிருக்க, பெண்கள் தனிமையில் வீட்டிலிருக்கிறார்கள். தாய் நாட்டில் பெரியதொரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த நிலைமாறி, உற்றாரும் உனவினருமின்றிஇ நண்பர்களும் தோழருமின்றி தனிமைதரும் வெறுமை மனச்சோர்வை தருவதால் ஒருவரின் உடல் மனநலம் பாதிப்புள்ளாகிறது.

எனதனுபவங்களில் சில:
முப்பத்தெட்டு வயதுடைய பெண், திருமணமாகி ஆறு வருடங்களாயிருக்கும். இவர் மூன்று தடவைகளில் முயற்சித்திருந்த ஐ.வி.எவ். என்னும் கருத்தரிக்கும் முறையினாலும் கருத்தரிக்க கூடாமல் போயிற்று. இவரினால் முட்டையை உருவாக்க முடியவில்லையென வைத்தியர்கள் முடிவாக கூறினார்கள். இறைவனின் அருளும் கூடுவிருக்க, இந்நிலையை என்னால் மாற்றமுடிந்தது. இவர் இப்பொழுது ஆரோக்கியமான ஒரு மகவைப் பெற்றெடுத்துள்ளார்.

முப்பத்திரண்டு வயதுடைய பெண், திருமணமாகி 4 வருடங்களாகியிருந்தன. மூன்று தடவைகளில் கருச்சிதைவடைந்து போனதாவும், ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரம் நடைபெறாமல் போனதாகவும் எனது சிகிச்சைக் கூடத்திற்கு வந்திருந்தபோது கூறினார். ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரத்தை மீளப்பெறுவதே எனது சிகிச்சைத் திட்டத்தில் முதன்மையாகவிருந்தது. 5 மாதங்களில் சக்கரம் வழமைக்குத் திரும்பியது.இதன் பின்னர் இவரின் கருப்பையை வலுபடுத்தி காத்திரமாக்கியதோடு, முட்டையுற்பத்தியையும் ஒழுங்காக ஏற்படுமாறு சிகிச்சைத் திட்டம் வகுக்கப்பட்டது. இப்பொழுது இவர் ஒரு ஆறுமாதக் குழந்தையின் தாயாவார்.

முப்பத்தாறு வயதுடைய பெண் பொலிசிஸ்ரிக் ஓவறி சின்றம் எனக்கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. லேசான மாதவிடாய் போக்கு, எடை அதிகரித்தல், ஆண்கள் போன்று நாடி, மேலுதட்டின் மேல், முளைக்காம்பைச் சூழ ஆகியவிடங்களில் மயிர்வளர்ச்சி போன்றன இவரில் காணப்பட்ட நோய்நிலைக் குறிகளாகும். பல தடவைகளில் குளோமிட் சிகிச்சை பயனளிக்காதபோது மெற்போமின்என்னும் மாத்திரை இவரது சிகிச்சை நிபுணரால் வழங்கப்பட்டது. 83கி.கி. எடையுடனிருந்தவரை நான்கு மாதங்களினுள் 70கி.கி. நிறைக்கு வெற்றிகரமாக குறைவடைந்தார்இ அத்துடன் அவரின் மாதவிடாய் போக்கில் முன்னேற்றம் காணப்பட்டது. இதன் பின்னர் ஆறு மாதத்திற்குள்ளாகவே கருத்தரித்துஇ இன்னுமொரு மாதத்தினுள் ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இருபத்தொன்பது வயது நிரம்பிய ஆண் என்னைச் சிகிச்சைக் கூடத்தில் சந்தித்திருந்தபொழுது திருமணமாகி மூன்று வருடங்களாகியிருந்திருந்தன. இவருக்கு உடலுறவின் பொழுது ஆண்குறியின் விறைப்புத்தன்மையை தக்கவைக்க முடியாதநிலையிலிருந்தது. திருமணமான காலத்திலிருந்து ஒரு தடவை கூட இது நடைபெறவில்லை. இலங்கையிலிருந்தபோது நடைபெற்ற சில துன்பமான நிகழ்ச்சிகளின் பின்விளைவாக (போஸ்ற் றொமற்ரிக் ஸ்றெஸ் டிஸ்ஓடர்) இந்நிலை ஏற்ப்பட்டிருந்தது. இது அவரின் உடல், உளநிலைகளை பெரியளவில் பாதித்திருந்தது. மூலிகை போசாக்குக் குறைநிரப்பிகள் போனறவற்றின் உடலுதவியினால, ஆண்குறியின் விறைப்புத்தன்மை நீடிக்கப்பட, தற்பொழுது இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவர். மேலும் பல குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது எனதவா.

நோய்க்கான அறிகுறிகள்:
ஆண்களின் (மகப்பேறின்மை) மலடு நிலைசம்பந்தமான அறிகுறிகள் பெரிதாக தென்படுவதில்லை. ஓமோன் சுரப்பில் குழறுபடிகள் கொண்ட ஆண்களில் குரலில் மாற்றம, தலைமயிர் வளர்ச்சியில் மாற்றம், மார்பு வளர்ச்சி அல்லது உடலுறவில் ஈடுபடமுடியாமை போன்றன விருத்தியடைகின்றன. பெண்களில் மாதவிடாய் சக்கரத்தில் ஒழுங்கீனங்கள, இனப்பெருக்க தொகுதிசார் ஏனையநோய் நிலைகள் போன்றன மாதவிடாய் போக்கின் பொழுதும் உடலுறவின் பொழுதும் நோவைத் தருகின்றன.

– பெண்களில் மகப்பேறின்மைக்காரண காரணிகள்:
(சூல்கொள்ளல், கருத்தரித்தல், கற்பம்பேணி குழந்தை பெறுதல்)

வயது
– 30 வயதுகளின் கடைக்கூற்றிலிருக்கும் பெண்கள் 20வயதுகளின் ஆரம்பத்திலிருப்பவர்களைக் காட்டிலும் 30வீதம் குறைவாகவே கருத்தரிக்கக்கூடும்.
– கருப்பைச் சுவர் குழறுபடிகள்
– நீண்ட நாள் நோய்நிலைகள் (உ+ம் நீரிழிவு, லுபஸ், மூட்டுவீக்கம், உயர்ந்த இறுக்கம், ஆஸ்மா (தொய்வு).
– சூழல் காரணிகள் (உ-ம் புகை பீடித்தல், மதுவருந்தல், வேலைத்தள நிலைகள் அல்லது சூழல், தொழில்சார் நஞ்சுகள்)
– உடலிலுள்ள மிககுறைந்த அல்லது அதிகூடிய கொழுப்பளவு
– கற்பகாலத்தில் டி.ஈ.எஸ். எடுத்தல்.
– உடலுறவினால் கடத்தப்படும் நோய்கள்
– பலோப்பியன் குழாயிலேற்படும் நோய்கள்
– பலதடவை கருச்சிதைவு

– ஆண்களில் மகப்பேறின்மைக்கான காரணிகள் :
மகப்பேறின்மை என்பது பெண்களுக்கு மட்டுமானதன்று ஆண்களின் பங்களிப்பில் ஏற்ப்படக்கூடிய குறைபாடுகள அல்லது காரணிகள்:
– ஆண் இனப்பெருக்க தொகுதிலமைந்த புறஸ்ரேற் சுரப்பியில் நோய், ஆண்குறியின் விறைப்புத்தன்மையைப் பேணமுடியாமை, உடலுறவினால் கடத்தப்படும் நோய்கள்.
– சூழலில் அல்லது வேலைத்தலத்தில் ஆபத்துவிளைவிக்கும் இரசாயனங்கள் (கதிர்வீச்சு, கதிர்த்தாக்கம் கொண்டவை, ஈயம், எதிலின் டைபுறோமின், வைனைல் குளோரைட் போன்றன)
– புகையிலை, மாஜவான ஏனைய போதைப் பொருட்களின் பாவனை.
– ஆதிகளவு மது உட்கொள்ளல்
– விதைப்பைகள் வெப்பநிலை அதிகமாகவிருத்தல் (உ-ம் இறுக்கமான, செயற்கை நூல்வகைத் துணிகளாலான கச்சை, வேலைத்தள வெப்பநிலை அளவுகள்)
– குடலிறக்க (கேணியா) சத்திரசிகிச்சை.
– விதைகள் விதைப்பையினுள் இறங்காமலிருத்தல்
– சொறாசிஸ் (தோல் நோய்) நோய்க்கான சிபார்சிக்கப்பட்ட மருந்துகள்
– விடலைப்பருவத்தில் கூவைக்கட்டு வந்திருத்தல்.

ஒரு வருட காலமாகவோ அல்லது அதற்கு சற்று அதிகமாகவோ சூல்கொள்ளும் பெண். உடலுறவின் போது கருத்தரியாமல் போதல் மகப்பேறின்மை எனக்கொள்ளப்படும். இது கருத்தரித்த பின் பிரசவம் வரையில் சென்றடையாத நிலையையும் குறிக்கும்.

சூல்கொள்ளல், சூல் விந்தினால் கருக்கட்டப்படுதல, கருக்கட்டப்பட்ட முட்டை பலோப்பியன் குழாயினூடு நகர்ந்து கருப்பையை அடைந்து வளர்ச்சியடைதல் போன்ற சிக்கலான நிலைகளை இது கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 40வீதம் குழந்தைப்பேறற்ற தம்பதியினரில், இந்நிலைக்கு ஆணே பகுதியாகவோ முழுமையாகவோ காரணமாகின்றார். ஆண்களின் மகப்பேறின்மைக்கு குறைவான எண்ணிக்கையில் விந்து உற்பத்தி செய்யப்படடுதல் முதன்மையான காரணமாகும். இச்சமயங்களில் உடற்கூற்றமைப்பில் ஏதாவது மாறுபாடுகள் காரணமாகலாம்.

ஆண்களில் விந்து எண்ணிக்கை குறைவாக காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. மதுபானம் அருந்துதல், அகச்சுரக்கும் சுரப்பிகளின் குறைபாடுகள், சூழலிலுள்ள நஞ்சுப்பதார்த்தம், பதிப்பான கதிர்கள், அதிகமான சூடு ஆகியனவும், நீண்ட நாள் காய்ச்சல் அல்லது வேறேதாவது வருத்தம், விதையில் ஏற்ப்பட்ட அடிபாடு அல்லது காயம் போன்றன காரணங்களாகின்றன. விதையில் விந்தணுக்கள் தோன்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் விதையுறையிலுள்ள விதைகள் பேணப்படவேண்டும். விதையைச் சுற்றியுள்ள நாளங்கள், சில ஆண்களில் அதிகம் விரிவடைவதனால், குருதி விதையைச் சுற்றி நில்லாமல், வடிந்தோடுவதனால், விதையில் தோன்றும் விந்தணுக்களை இது பாதிக்கின்றது.

பெண்கனில் மகப்பேறின்மைக்கு, சூலகத்திலுள்ள குறைபாடுகள், பலோப்பியன் குழாய் அடைப்புக்கள், என்டோமீற்றியோசிஸ் எனப்படும் கருப்பையில் வழமைக்கு மாறான உட்சுவர் கட்டி வளர்ச்சிகள், யுறையின் பைபுரைட் எனப்படும் கருப்பையின் உள் வெளிச் சுவர்களில் தோன்றக் கூடிய பாதகமற்ற கட்டிகள் போன்றன காரணங்களாகின்றன. சில பெண்களில் விந்தணுவை எதிரியாக கருதி எதிர்ப்பு உடலங்கள் தோற்றுவிக்கப்படுவதனால் பெண்ணின் உடலில் விந்து ஏற்றுக்கொள்ளப்படாமல் போகின்றது. சல்லமைடியா எனப்படும் உடலுறவின்போது கடத்தப்படும் நோயும் மகப்பேறின்மைக்கு ஒரு காரணமாகும். பெற்றோர் ஆகிவிடும் பயம், வாழ்;க்கைப்பழு, மகப்பேறின்மையால் ஏற்படும் வாழ்க்கைப்பழு அல்லது சமூகப்பழி ஆகியன உளவியற் காரணங்களாகின்றன.

மகப்பேறின்மைக்கான பொதுவான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்படும்:
– பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சிக்ள (என்டோமீற்றியோசிஸ்).
– ஆண்களில் மாற்;றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).
– பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.
– பெண்களில் சூல் தோன்றாதிருத்தல் அல்லது ஒழுங்கன்றி தோன்றுதல்.
– தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல்.
– பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.
– பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டு செல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.
– பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்தல்.

பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.

தொடரும்..!