சிறுநீர்த் தொற்று (Bladder Infection)

சிறுநீர்த் தொற்று என்றால் என்ன?
சிறுநீர்த் தொற்று என்பது ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் ஒரு விடயமாகும். சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய்கள், சிறுநீர்ப் பை, ஆண் குறி, சிறுநீர் வடிகுழாய் ஆகிய உறுப்புகள் உடலில் தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்கு உதவுகின்றது. சிறுநீர்ப்பை அலர்ஜி, யுறேத்திரடிஸ் (சிறுநீர் வடிகுழாய் தொற்று), சிறுநீரகங்களில் தொற்று, போன்றன பொதுவாக பெண்கள் மத்தியிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இருப்பினும் ஆண்களுக்கும் இத் தொற்று ஏற்படலாம். இது சில சமயம் சுக்கில சுரப்பியின் (Prostate gland) கடுமையான நோய்கள் சிலவற்றுக்கான அறிகுறிகளாகவும் தோன்றலாம். ஆண்களில் காணப்படும் Urethritis பொதுவாக பாலியல் உறவின் மூலமாகவே ஏற்படுகின்றது. பெரும்பான்மையான தொற்றுக்கள் சிறுநீரகங்கள், சிறுநீரகப்பை, சிறுநீர் குழாய்கள் போன்றவற்றையே அதிகமாக தாக்குகின்றன. இவற்றை சிறுநீர் தொற்று அல்லது UTIs என கூறப்படுகின்றது. Escherichia வாலையே 85% மான சிறுநீர் பாதைத் தொற்று ஏற்படுகின்றது. Chlamydia யாவும் சிலசமயம் சிருநீர்ப் பை பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம்.
Cystitis, Pyelonephritis, Urethritis போன்ற தொற்றுக்கள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக வரக்கூடிய சாத்தியமுண்டு. ஏனென்றல் மலவாசல், கருப்பைவாய்க் குழாய், சிறுநீர் வடிகுழாய் என்பன நெருக்கமாக இருப்பதுடன் பெண்களின் சிறுநீர்வடிகுழாய் சிறியதாகவும் காணப்படுவதால் மல வாய், கருப்பை வாய், சிருநீர்வடி குழாய்க்கு மிக இலகுவாக பக்ற்றிரியா தொற்றிவிடுகிறது. அதுபோல் ஆண்களுக்கு சுக்கில சுரப்பி போன்றன மூலம் தொற்றலாம். எவ்வாறாயினும் இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். சிறுநீர்த் தொற்று விருத்தியடைந்தால் அது பலவகையான பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. உதாரணமாக மகப்பேறு, பாலியல் உறவு, உதரவிதானப் பயன்பாடு போன்றவற்றை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இவை மேலும் விருத்தியடைந்தால் சுக்கிலவழற்சி ஐயும் உருவாக்கும். மற்றும் சிறுநீர்கழித்தல் இலகுவாக இல்லாத சந்தர்ப்பத்தில் அதாவது சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்புக்கள் இருப்பின், சிறு நீர்வடிகுழாயில் பழைய தொற்றுக்கள் விளைவாக ஏதும் சுருக்கங்கள் இருத்தல், போன்றவற்றாலும் இது ஏற்படலாம். மாறான கட்டமைப்பு ஏதும் இருப்பின் அது மேலும் சிறுநீர்ப்பை அலர்ஜியை அதிகரிக்கும்.

சிறுநீர்த் தொற்று ஐ எவ்வாறு கண்டறிவது?
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை வெறுமையாக இருப்பினும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுதல், அது போல் சிறுநீர் கழிக்கும் போது நோ ஏற்படல், விரும்பத்தகாத மணத்துடன் மேகமூட்டம் போல் தெளிவற்றுக்காணப்படும். இவ்வாறான அறிகுறிகளை வைத்து தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பை தொற்றிருப்பின் சிறுநீர் கழிக்கும் வேளைகளில் அடிவயிற்றில் நோ ஏற்படும். சிலசமயம் சிறுநீருடன் இரத்தம் வெளியேறும் தன்மையும் காணப்படும். இத் தொற்றை சரிவர குணப்படுத்தாத நிலையில் அது வேறு சில நோய்க்கும் வழிவகுக்கும்.

மூலிகை குணப்படுத்த உதவுகின்றது

சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அண்டிபயோடிக் போன்ற குழுசைகளைப் பாவிக்கலாம். இந்நிலை தொடருமாயின் அல்லது அடிக்கடி ஏற்படுமாயின் (அதாவது 2 மாதங்களுக்கு ஒரு முறை) எங்களது மூலிகை வைத்தியரை நாடவும். உங்களது தொற்றை பரிசோதனை செய்து அவற்றிக்கு ஏற்றவாறு மருத்துவமளிக்கப்படும்.