சூரிய நமஸ்காரம்

தினமும் நாம் காலையில் எழுந்து, மிகவும் தவிர்க்க முடியாத சிரம பரிகாரங்களைச் செய்துவிட்டு வேலைக்கென விழுந்தடித்து ஓடுகின்றோம். பெரும்பான்மையான நேரங்களில் எமது உடலும் மனமும் அன்றைய நாளில் எவ்வாறிருக்கின்றது என்பதைப்பற்றி சற்றேனும் சிந்திப்பதில்லை. மேலாக பெரும்பாலும் அவை இருப்பதான உணர்வேயில்லை. மன உடல் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் சற்று சிந்தித்து அவற்றை ஒருசில நிமிடம் மீட்டிப் பார்ப்போமால் நாள் முழுவதையும் ஒரு நல்ல சந்தோசமான, உற்சாகமான நாளாக கழிக்க முடியும்.

சூரிய நமஸ்காரம் என்னுமிந்த அப்பியாசத்தை நாளின் ஆரம்பத்தில் செய்யமுடியுமானால், இன்றைய நாளை நாம் நன்றே ஆரம்பிக்கலாம். கிடைத்த இன்றைய பொழுதை மனதும் உடலும், செய்யும் காரியத்தில் குவியச்செய்து இனிய, உற்சாகமானதொரு நாளைப்பெற சில நிமிடங்களை உங்களுக்காக செலவு செய்யுங்கள்.

1. நேராக நிற்றல் : நேராக நிற்கவும் பெருவிரல்களும், குதியும் ஒன்றையொன்று தொடும் வண்ணம் ஒருமித்து இருக்கட்டும். உடலின் பாரம் கால்களிரண்டிலும் சமமாக பகிரப்பட்டிருக்கட்டும். இந்நிலையில் சமநிலையைப் பேணவும். விரல்கள் ஒன்று கூடியயிருக்க, கைகள் உடலின் பக்கமாக இருக்கட்டும்.

2. மேல் நோக்கியிழுத்தல் : உள்மூச்சு எடுக்கவும், கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி உள்ளங்கைகளை ஒன்று சேர்க்கவும். முள்ளந்தண்டை நீட்டி, நெஞ்சுக்கூட்டை உயர்த்தி தோட்பட்டையை தளர்த்தவும். கழுத்து, கீழ் முதுகுப் பகுதியில் அமைந்த முள்ளந்தண்டை அழுத்திப்பிடிக்க வேண்டாம். கைப்பெருவிரல்களை நோக்கிப் பார்க்கவும்.

3. முன்னோக்கி வளைதல் : மூச்சை வெளியே விட்டுக்கொண்டே உடலை முன்நோக்கி வளைக்கவும். முன்நோக்கி வளைக்கும் பொழுது முள்ளந்தண்டு நேராக இருக்கட்டும். தலையால் தொடுவது போன்று நன்றாக நீளட்டும். இதற்கு மேலும் நீளமுடியாதபோது முள்ளந்தண்டை நேராக நிறுத்திவைக்கவும். தலையை தளர்த்திஇ முழங்காலுக்கு எவ்வளவு அண்மையாக கொண்டுவர முடியுமோ அவ்வளவிற்கு கொண்டுவரவும். நூடி முழந்தாளை முட்டுவதே மிகவும் சிறந்த நிலையாகும். முழந்தாளை நேராக வைத்துக்கொண்டு உள்ளங்கைகளை பாதத்திற்கு பக்கமாக நிலத்தில் படிய வைக்கவும். கைவிரல்களும் காற்பருவிரலும் ஒரே கோட்டில் இருக்கட்டும். இந்நிலையில் மூக்கின் நுனியை கூர்ந்து நோக்கவும்.

4. உட்சுவாசம் எடுக்கவும்: தலையை மேலே உயர்த்தவும், முள்ளந்தண்டை நேராக்கவும், உள்ளங்கையோ அல்லது விரல் நுனிகளோ தரையை தொட்டவண்ணம் இருக்கட்டும். இரு விழிகளின் மேல் மத்தியில் அமைந்த மூன்றாம் விழியை உற்று நோக்கவும்.

5. உடலை உயர்த்தல் : வெளிச்சுவாசிக்கவும், முழங்காலை மடிக்கவும். கால்களை பின்புறமாக உதறி நேராக பின்புறமாக வைத்திருக்கவும். சற்று மடிந்திருக்கும் காற்பெருவிரல் உடலின் பாரத்தை சமநிலைப்படுத்தவும். கைகளை முழங்கையில் மடித்து, நெஞ்சுக் கூட்டிற்கு இருமருங்கும் கொண்டுவந்து, விரல்களை நன்கு விரித்து உள்ளங்கைகளை தோளுக்கு நேரே கீழே வைக்கவும். இப்பொழுது உடலானது நெற்றியிலிருந்து கணுக்கால் வரை ஒரு நேர் கோட்டிலிருக்கும். உடலை கைகளுக்கும், கால்களுக்கும் இடையே சமநிலைப்படுத்தி வைத்திருக்கவும். பெருவிரலைப் பயன்படுத்தி உடலை முன்னே உந்தித்தள்ள வேண்டாம்.

6. நாகபடம் – புஜங்காசனம்: கடைசி ஆசன நிலையிலிருந்து உட்சுவாசம் எடுக்கவும். கைகளை முழங்கையில் நிமிர்த்தவும், தலையை பின்புறமாக வளைக்கவும், மேல் முதுகை இழுத்து வளைப்பதனால் கீழ் முள்ளந்தண்டில் அழுத்தம் ஏற்ப்படாது. தலையை நன்கு நிமிர்த்தி வானத்தை அல்லது மேன்நோக்கிப் பார்த்தவண்ணம் மூக்கின் நுனியை கூர்ந்து கவனிக்கவும்.

7. முக்கோண நிலை : வெளிச்சுவாசிக்கவும், இடுப்பை உயர்த்தும் பொழுது-தலைகீழாக அமைந்த ஏ எழுத்து () போன்ற வடிவில் உடலானது சமநிலைப்படும். பாதமும் உள்ளங்கையும் தரையில் முழுதாக படும்வண்ணம் இருக்கட்டும். முழங்கால், முழங்கை நேராக இருக்கட்டும். முழங்கைவிரல்களை நன்கு அகல விரித்து வைக்கவும். தொத்பூளை கூர்ந்து நோக்கியவண்ணம், இந்நிலையில் ஐந்து தடைவ சுவாசம் செய்யவும்.

8. உட்சுவாசம் செய்து, நான்காவது நிலைக்குச் செல்லவும்.

9. வெளிச்சுவாசிக்கவும், முன்நோக்கி குனிந்து மூன்றாம் நிலைக்கு செல்லவும்.

10. உட்சுவாசித்து, நிலை இரண்டிற்கு வரவும்.

11. நேராக நிற்றல்: வெளிச்சுவாசிக்கவும், உடலை நிலை ஒன்றிற்கு கொண்டுவரவும்.

 

குறிப்பு:
யோகி பஜன் என்பவர் தனது குருவின் கீழ் குண்டிலினி யோக கிரிகைகள் செய்வதற்கு முன்பாக சூரிய நமஸ்காரத்தை பயிற்சி தயார்படுத்தல் அப்பியாசமாக செய்வார். இந்த அப்பியாசங்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பதாகவும், இதையே வேறு பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பதாவும், இதையே தனியாகவும் செய்யலாம். இந்த ஆசனங்களை செய்யும் பொழுது, இரத்த சுற்றோட்டம் அதிகரிக்கிறது, முள்ளந்தண்டு மடிகிறது, உடல் உள்;ளுறுப்புக்கள் அழுத்தப்படுகின்றது, சமிபாடு நன்கு நடைபெற வழிசமைக்கிறது. நுடையீரலை அதிகமாக செயற்பட வைப்பதால் குருதியில் ஒட்சிசனின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த அப்பியாசத்தை செய்யும் பொழுது, சுவாசத்தை ( உட்சுவாசம், வெளிச்சுவாசம்) ஒரு ஒழுங்கில் செய்யும் பொழுது ஓர தாள லயத்தில் இந்நிலைகளைச் செய்யலாம். ஆரம்பத்தில் மூன்று தடவைகள் ( வட்டங்கள் – ஒரு வட்டத்தில் 11 நிலைகள் அல்லது ஆசனங்கள்) செய்வதாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக 5 அல்லது 6 சுற்றுக்களுக்கு அதிகரிக்கலாம். என்ன செய்கின்றோம் என்பதை தெரிந்துகொண்டு செய்வதன் மூலம் ஒருவர்; தனது செயற்திறனை அதிகரிக்க கூடியதோடு, யோக அப்பியாசங்களை சந்தோசமாக செய்யலாம்.