உயர் குருதி அழுத்தம் (கை பிளட் பிறசர்(எச்.பி.பி))

இதயம் குருதியை நாடிகளினூடாக விசையாக அனுப்பும் பொழுது நாடிக்குழாய்களின் சுவரில் ஒரு அழுத்தம் ஏற்ப்படுகிறது. உயர் குருதி அழுத்தம் கொண்டிருப்பவர்களில் குருதிச் சுவரில் அளக்கப்படும் அழுத்தம் மிகவும் உயர்வாக காணப்படும்.

ஒருவருடைய குருதி அழுத்தம் மிக உயர்ந்தது , இருக்கவேண்டியது (சாதரணம்), அதிதாழ்வானது ஆகிய மூன்று நிலைகளில் காணப்படலாம். இந்த மூன்று நிலைகளும் பலவேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இதயத்தினால் வெளிச் செலுத்தப்படும் குருதியின் அளவு, நாடிகளினூடாக குருதி செல்லும் போது ஏற்ப்படக்கூடிய தடை, இதயத்தின் குருதி வெளியனுப்பும் வலிமை, அங்கங்களுக்கான குருதி வநியோகம் போன்ற காரணிகள் ஒருவரின் குருதி அழுத்தத்தை தீர்மானிக்கும் காரணிகளாகும். மேற் கூறிய காரணிகள் யாவும் நரம்புத் தொகுதியினதும், சில ஓமோன்களின் கட்டுப்பாட்டிலும் செயற்படுகின்றன.

இரத்த அழுத்தம் அதிதமானதாக காணப்பட்டால், உடலின் எல்லா அங்கங்களுக்கும் குருதியை போதியளவில் அனுப்புவதற்கு இதயம் இன்னும் அதிகமாக வேலை செய்யவேண்டியிருக்கும். காலப்போக்கில், சிறுநீரகம் செயற்படாமை (கிட்னி பெயிலியர்), இதயம் செயற்படாமை (காட் பெயிலியர்) மேலும் இரத்தக்குழாயில் இரத்த உறைவு (ஸ்றோக்) ஆகியவற்றைக் கொண்டுவரக்கூடும். உயர் இரத்த அழுத்தம் (எச்.பி.பி) கொறோனறி காட் டிசீஸ், சிறுநீரக செயற்திறன் குறைபாடுகள், உடல் பருமனடைதல், நீரிழிவு (டயபிற்ரீஸ்), அதிகளவு தைரேயிட், அரிதினல் சுரப்பி கட்டிகள் (அட்றீனல் ரியுமேர்ஸ்) போன்ற நோய் நிலைகளும் தொடர்புள்ளனவாக காணப்படுகின்றன.

ஆண்களையும் பெண்களையும் உயர் இரத்த அழுத்தம் பாதிக்கின்றது. பெண்கள் உயர் குருதி அழுத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இரத்த அழுத்த அளவு அதிகம் உயர்ந்த பின்னர்தான் அனேகமான சந்தர்ப்பங்களில் நோய் கொண்டவர் அறிந்துகொள்கின்றார்கள். உயர் குருதி அழுத்தம், வழமையாக எதுவித அறிந்துகொள்ளக் கூடிய அடையாளங்களையும் இலகுவில் வெளிக்காட்டாதபடியால் ‘அமைதியாக வரும் கொலையாளி’ எனக்குறிக்கப்படுகின்றது.

எச்.பி.பி யினால் ஏற்படும் உயர் அழுத்தம் (கைரென்சன்), தலையிடி, வியர்த்தல், விரைவான நாடித்துடிப்பு, விரைவில் மூச்சிரைப்பு, தலைச்சுற்று (டிசினெஸ்), பார்வை தெளிவின்மை போன்றவற்றால் அறிவிக்கப்படுகின்றது.

இரத்த அழுத்தம் முதன்மையானது (பிறைமறி), இரண்டாவது (செக்கன்டறி) ஆகியவாறு வேறுபடுத்தலாம். முதன்மையான இரத்த அழுத்தம், இரு நிலைகளாக உடலில் வேறேதாவது நோய்நிலைகள் இல்லாத போது காணப்படுவதாகும். இது தோன்றுவதற்கான காரணங்களை குறிப்பாக சொல்லமுடியாவிடினும், புகை பிடித்தல், வாழ்க்கைப்பழு (ஸ்றெஸ்), உடல் பருமனடைதல், நரம்புத்தொகுதியை ஊக்குவிக்கும் பதார்த்தங்களான கோப்பி, தேயிலை, போதைப்பொருள், உணவில் சோடியம் உப்பு அதிகம் சேர்த்தல் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. உடல் எடை அதிகமானவர்களில் உயர் இரத்த அழுத்த நிலை காணப்படுகின்றது. வாழ்க்கைப்பழு இரத்த நாடிகளில் ஒடுங்கவைப்பதால் குருதி அழுத்தம் அதிகரிக்கின்றது. தலைமுறையாகவும் இது கொண்டு செல்லப்படுவதாக கருத்தப்படுகிறது.

இரண்டாவதான உயர் அழுத்தம் எனப்படுவது, உடலில் ஏற்பட்டுள்ள வேறேதாவது நோய்நிலை தொடர்பானது. தொடர்ச்சியான உயர்ந்த இரத்த அழுத்தம் அவதானிக்கப்பட்ட அளவுகள் அசாதாரணமான குருதி ஓமோன் அளவு, குடும்பத்தில் நிலவும் இரத்தக்குழாய் ஒடுக்கமடைதல் போன்றன காரணங்களாகின்றன. ஒருவருடைய குருதிக் குழாய் சுவர்களில் கொழுப்பு படிவுகளினால் குழாய் குறுக்கமடைவதனால் அல்லது குருதிக் குழாயின் சுவரின் மீள்தன்மை இழக்கப்படுவதனாலும் இரண்டாம் வகை இரத்த அழுத்தம் தோன்றவாய்ப்புண்டு.

நாடிக்குழாய்கள் ஒடுக்கமடைதல் அல்லது இறுகி தடிப்படைவதனால் குருதிச் சுற்றோட்டம் கடினமாகிறது. குறுகளான குழாயினூடாக குருதியை செலுத்தவேண்டி இதயம் மேலும் வலுவாக வேலை செய்ய வேண்டியிருப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. சிறுநீரக தொழிற்பாடு சீராக இல்லாத பொழுது தேவைக்கதிகமான சோடியம் உப்பு வெளியேற்றப்படாமையாலும் குருதியில் உப்பின் அளவு அதிகரிப்பதனாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். சிறுநீரக சுரப்புக்களும் குருதிக்குழாய் சுவரை சுருங்க வைப்பதனால் குருதி அழுத்தம் அதிகரிக்கிறது.

குருதி அழுத்த அளவுகள் கருவியொன்றினால் இரண்டு நிலைகளில் அளக்கப்படும். இந்நிலைகள் சிஸ்ரோலிக் பிறசர், டயஸ்ரோலிக் பிறசர் என குறிக்கப்படும். இதயம் குருதியை, குருதிக் குழாய்களினூடாக உயர் அழுத்தத்துடன் அனுப்பும் பொழுது கருவில் வாசிக்கும் அளவு சிஸ்ரோலிக் பிறசர் எனப்படும். இந்த வாசிப்பு அளவு மற்றையதை விட எப்பொழுதும் உயர்வானதாகும். இரண்டு இதய அடிப்புக்களுக்கு இடையே இதயம் சற்று ஓயும் பொழுது கருவியில் வாசிக்கப்படும் அளவு டயஸ்ரோலிக் பிறசர் எனக் குறிப்பிடப்படும். இது இரண்டு வாசிப்புக்களிலும் குறைவானதாகும். குருதி இரத்த அழுத்தம், குருதி அழுத்தமானியில் உள்ள இரசம் (இரசம் – மேக்குறி) கோட்டின் உயர மட்டத்தின் அளவால் அறியப்படும். கருவியில் உள்ள இரசகோடு மில்லி மீட்டர் (மி.மி) அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இரண்டு வாசிப்புக்களையும் சேர்த்து ஒரு பின்னவடிவில் கூறப்படும். உதாரணம்: 120 (சிஸ்ரோலிக்) ன் கீழ் 80 (டயஸ்ரோலிக்).

ஓன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் ஒரு நாளில் குருதி அழுத்த அளவுகளை எடுத்த பின்னர்தான் எச்.பி.பி ஏற்ப்பட்டுள்ளது என்னும் முடிவிற்கு வரவேண்டும். குருதி அழுத்த அளவுகளை வீட்டிலும் எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் எடுத்துக் கொள்வதனால் பின்வரும் அனுகூலங்கள் உண்டு.
V) வௌ;வேறு நேரங்களில் அளவுகள் எடுக்கலாம்.
V) மருத்துவரைச் சந்திக்கிறேன் என்னும் மனநிலை குருதி அழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தை (உயர்வை) தவிர்க்கலாம்.
V)உயர் இரத்த அழுத்தம் வாசிக்கப்பட்ட அளவுகளில் காணப்படும் போது மருத்துவருடன் தொடர்பு கொள்ளலாம்.
V)மருத்துவரை நேரடியாக சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்களை குறைத்துக்கொள்ளலாம்.

அறிவுரைகள்:
உப்பு இல்லாத உணவு கட்டாயமாக பின்பற்றபடவேண்டும். உப்பு போட்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். உள்ளடக்கிய உணவுப்பட்டியலில் உப்பு சேர்க்கப்பட்டதானால் அவ்வுணவை தவிர்க்க வேண்டும். இப்பட்டியல்களில் உப்பு, சோடா, சோடியம் என குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வுணவு தவிர்க்கப்படவேண்டும். குறிப்பிட்ட உணவு விருப்பத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பதார்த்தங்களைக் கொண்ட உணவுகளை தவிர்க்கவேண்டும் வூட் அடிற்ரீவ்ஸ் உ-ம் மொனோசோயம் குளுற்ரமேற், அப்பச்சோடா. மருந்துக் கடைகளில் வாங்கக்கூடிய இப்புறோபின் எனப்படும் பதார்த்தைக் கொண்ட அல்லது செயற்கை இனிப்பு பானங்கள், மென்மையாக்கப்பட்ட நீர், சோயா சோஸ் போன்றவற்றை தவிர்க்கப்படவேண்டும்.

V) நார்ச்சத்து கொண்ட உணவை சேர்க்கவேண்டும். உ-ம் (ஓட்ஸ் பிறான்) ஓட்ஸ் தானியம்.
V) அதிகளவு மரக்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேணடும். மரக்கறிகளில் அஸ்பறகஸ், புறக்கோலி, கோவா, கத்தரி, உள்ளி, பச்சை இலைக்கறிகள், டயஸ்ரோலிக பீஸ் போன்றவற்றையும், பழங்களில் அப்பிள், வாழைப்பழம், வர்த்தகை வகைப்பழங்கள் (மெலன்), கிறேப்புறூட், புறூன்ஸ், முந்திரிகை வற்றல், வத்தாளங்கிழங்கு போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
V) உடனடியாக பிளிந்த பின் குறிப்பிடப்படும் சாறுகளை பீற், கரட், சிலேறி, கரண்ற், கிரான்பொ, தோடைக்குடும்ப பழங்கள், பாசில, ஸ்பினச், வர்த்தக வகை.
V) சிவப்பு அரிசி, பக்வீற், குரக்கன், ஓட்ஸ் போன்ற தானியங்களை உணவில் சேர்க்க வேண்டும்.
V) எல்லா விலங்கு கொழுப்பு கூடிய உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டும். பதனிடப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட, புகையில் வாட்டப்பட்ட உணவுகள் யாவும் தவிர்க்கப்பட வேண்டும். உ-ம் பன்றி இறைச்சி(பேக்கன்), மாட்டிறைச்சி, பால் சேர்த்த பண்டங்கள் போன்றன. மீன், தோலுரித்த கோழி அல்லது ரேக்கி இறைச்சி போன்றவற்றை அளவோடு உண்ண வேண்டும். உடலின் புரதத் தேவையை தாவர உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும். உ-ம் தானியங்கள், அவரைக் குடும்ப தாவர வகைகள்.
V) சுவையை அதிகரிப்பதற்காக நீண்ட நாட்கள் வைக்கப்படும் உணவுப் பொருட்களான, வெண்ணெய் கட்டி (சீஸ்), இறைச்சிவகைகள், அஞ்சொவி, அவக்காடோ, கொக்கோ சேர்த்த பண்டங்கள், ஊறவைத்த கெறிங் மீன், செறி எனப்படும் மதுபானம், வைன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்க்கவேண்டும்.
V) எல்லா வகை மதுபானங்கள், கபீன் கொண்ட பண்டங்கள், புகையிலை போன்ற பொருட்கள் யாவும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாதத்தில் மூன்று தொடக்கம் ஐந்து நாட்களிற்கு விரதம் இருக்கலாம். உடலில் சேர்ந்திருக்கக் கூடிய நஞ்சுப் பதார்த்தங்களை அகற்ற முடியும்.
உடலின் நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். அதிக நிறையைக் கொண்டிருந்தால் நிறைக்குறைப்பிற்கான வழிகளைக் கையாள வேண்டும்.
நாட் தவறாத, ஒழுங்கான, மிதமான உடற் பயிற்சி செய்யவேண்டும்.
போதியளவு குழம்பாத நித்திரை கொள்ள வேண்டும்.
ஒழுங்கான இடைவேளைகளில் வைத்தியர் அல்லது தாதியைக் கொண்டு குருதி அழுத்தம் அளவிடப்பட வேண்டும். ஏனெனில் கைபரென்சன் பொதுவாக வெளிக்காட்டப்படுவதில்லை.
கற்பிணிப் பெண்களும், குருதி அழுத்தத்தை அடிக்கடி வைத்தியர் அல்லது தாதியரைக் கொண்டு அளவிட்டுக் கொள்ள வேண்டும். கற்பிணிப் பெண்ணின் உயர் குருதி அழுத்தம் கவனிக்கப்படாமல் போனால் அது தாயிற்கும் சேயிற்கும் உயிராபத்தை விளைவிக்கலாம்.
பீனையில் அலனீன் அல்லது ரைறோசின் கொண்டிருக்க கூடிய அமினோ அமிலங்கள் கொண்ட உணவுக் குறைநிரப்பி எடுக்கக் கூடாது. செயற்கை இனிப்பு பீனையில் அலனீன் கொண்டது.
பயன்படுத்தக்கூடியவை:
மூலிகை கலவை: – கோத்தோண் பிளஸ்
குறைநிரப்ப:p – கோகியு ரென் 10 – 100மி.கி.
தாதுப்பொருள்: பொட்டாசியம் மக்னீசியம் அஸ்பாரேற்.