மாதவிடாய் முடிவடைதல்/நிறுத்தம்

பெண்களுக்கு பொதுவாக அவர்களின் ஐம்பது வயதளவில், மாதவிடாய் முற்றாக முடிவுக்கு வர ஆரம்பித்த நிலை முடிவுக்கு வருகிறது.  மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாய் முற்றாக  நின்று போவதாகவும். இதன் பொழுது சூலகத்திலிருந்து முட்டை உற்ற்பத்தி முற்றாக நின்று போகின்றது. இதன் பிற்பாடு இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லது போகிறது.பெண்களுக்கு அவர்களின் நாற்பது வயதுகளின் ஆரம்பத்திலிருந்து அல்லது ஐம்பதுகளின் நடுக்கூற்றில் கூட ஆரம்பித்து 2-3 வருடங்கள் நீடித்து போகலாம். பெண்களின் வாழ்வில் உடல் உள ரீதியில் பெரு மாற்றத்தை  ஏற்படுத்துகின்றது.

உடல் ரீதியான மாற்றங்களுடன்,அழகில் குறைந்தும் கவர்ச்சியற்றும் போவேரே என்ற பயமும்இ வாழ்வில் குழந்தை பெற்று கொள்ளக்கூடிய நிலை கடந்து போனதே என்ற கவலையும் சேர்ந்து கொள்கின்றது. உடல் ரீதியாக வழமையான  ஓமோன் சமநிலை குழப்பமடைவதனால் பல சிக்கலான மாற்றம் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய்   திடீரென நின்றுவிடுகின்றது. ஆனால் பலருக்கு  வழமையான  மாதவிடாய் ஒழுங்கற்று வருவதும், இலேசாக இருப்பதும், காலம்  தாழ்ந்து வருவதும் காணப்படுகின்றது. சில சமயங்களில் ஒரு மாதம் முற்றாக ஒன்றுமில்லாது போய் பின்னர் வருவதாகவும் உள்ளது. சிலருக்கு இடைப்பட்டகலங்களில் இரத்த ஒழுக்கு அல்லது இரத்த சொட்டுகள்(கட்டிகள்) வருவதுமுண்டு. மாதவிடாய் முடிவுக்கு வரும் காலத்தில்  சூலகத்திலிருந்து முட்டை உற்பத்தி நின்று போகும் பொழுது Estrogen ஓமோன் உற்பதியும் நின்று போகிறது. இந்த ஓமோன் தான் பெண்களின் இனப்பெருக்க வட்டத்தை நடத்திச் செல்வதில் முக்கியமானதாகும். Oestrogen ஓமோனின் அளவு உடலில் குறைவடைவதனால் hst fushes நித்திரையிமை, இரவில் வியர்த்தல், நிறை அதிகரிப்பு யோனிமடல் உலர்வு போன்ற அசெளகரியங்கள் ஏதாவது ஒன்ரினால் பல பெண்கள் துன்பப்படுகின்றன. பலர் காலப்போக்கில் என்பு நலிந்து போவதை கவனிக்காது போகின்றனர். Osteo prosis என அழைக்கப்படும் இந்நிலையில் என்பு அதன் அடர்த்தியில் குறைவடைந்து, பல துளையிடப்பட்ட நிலைக்கு வருவதனால் இலகுவில் உடைந்து போக்கக்கூடிய நிலைக்கு வருகிறது. Eestrogen அளவு குறைந்து போவதனால் மார்படைப்பு ஏற்படும் நிலைக்கு எதிரான பாதுகாப்பும் குறைவடைகிறது.

மாதவிடாய் நின்று போகும் நிலை வரும் காலங்களில் பெண்கள் அங்கலாப்பு, கவனத்தை குவிக்க முடியாமை, இலகுவில் எரிச்சல் உட்டப்படும்நிலை, உணர்வு நிலை மாற்றங்கள், சில சமயங்களின் மன விரக்தி போன்ற பல உள நிலை சார்பான துன்பங்களுக்குள்ளாகின்றார்கள் . தமது வாழ்கையில் இதுவரை அனுபவித்த தமது ஸ்தானத்தை இழந்து விட்டதாக இவர்கள் உணர்வதற்க்கு குழந்தைகள் வீட்டை விட்டு போய்விடுவதும், உடலுறவில் நாட்டம் குறைவதும் காரணமாகலாம். அதே வேளை, வழமையான மாதவிடாய் தொடர்பான அசெளகாரியங்கள் இல்லாமையாலும், கர்பமுறும்(கருத்தடை பயன்படுத்தவேண்டியதில்லை) பயமின்றி

உடலுறவில்  ஈடுபடலாம்.மாதவிடாய் நின்று போன பின்பும்,பெண்கள் பல வருடங்களுக்கு ஆரோக்கியமான, நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கையை  முன்னெடுக்கலாம்.