வெங்காயம்

போசாக்கு உயிர்ச்சத்துக்கள்:

– வெங்காயத்தில், அதிகளவு உயிர்ச்சத்துக்கள் ஏ,ஈ காணப்படுகின்றன. இவையிரண்டும் சேதம் விளைவிக்கும் கட்டாக்காலி நிறைவுறாத அணுக்களின் (பிறிரடிக்கல், ஒக்ஸ்சிடன்ஸ்) தாக்கங்களை எதிர்த்து செயலாற்றுகின்றன.

 

– உயிர்ச்சத்து சி, கல்சியம், இரும்புச்சத்து, கந்தகம் (சலபர்) ஆகியன அதிகம் கிடைக்கின்றன.

 

– சாதாரணமாக வீட்டில் கிடைக்கும் ஒரு அருமருந்தாகும். வெள்ளைவெங்காயத்தை விட கூடுதலான நோய் தீர்க்கும் தன்மை கொண்டது. வெள்ளை வெங்காயம் அதிகளவு உயிர்ச்சத்து ‘ஈ’ ஐக் கொண்டிருந்த பொழுதும் சிவப்பு வெங்காயத்தில் உயிர்ச்சத்து ஏ,ஈ ஆகியனவுண்டு. வெங்காயத்தை பச்சையாக, பொரித்து, உலர்த்தி, அவித்து எப்படி உட்கொண்டாலும் அது திறமையான குணப்படுத்தும் பொருளாகும்.

புதிதாக தயார்செய்த வெங்காயச் சாற்றை, லேசான எரிகாயம், பூச்சிகொட்டிய இடங்களில் பூசலாம். இன்புளுவென்சா கண்டவர்கள் இடித்த வெங்காயத்தை சற்று சூடான நீரில் ஊறவைத்து நாளுக்கு 3 – 4 முறை அருந்திவர 2- 3 நாட்களில் குணப்படும். புதிய வெங்காயச் சாற்றைத் தேனில் கலந்து குடிக்கலாம்.

வெங்காயம் நீரிழிவுக்கு எதிராக, பங்கசு தொற்றுக்கு எதிராக, நுண்ணுயிர் தொற்றுக்கெதிராக அமைதிப்படுத்தல், சிறுநீர் பெருக்கல், சமிபாட்டை மேம்படுத்தல், உடலை உரமாக்கல் ஆகியவற்றிற்காக பயன்படுத்தலாம்.

 

வெங்காயத்தை பின்விரும் நோய் நிலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

– சளி

– மார்புச்சளி

– தூக்கமின்மை

– காமாலை

– மண்ணீரல் வீக்கம்

– சமியாக்குணம

– பல்வலி

– தோற்காயம்

– காதுக்குத்து

– நரம்புச்சோர்வு

– மூளைச்சோர்வு

– பதகளிப்பு

– தடிமன் இருமல்

– குருதிச்சோகை

– போதைவஸ்து அடிமை

– கசம்

– ஈரல் வீக்கம்

 

வெங்காயம் சுவாசப்பைகளைப் பலமாக்குவதுடன் குடலையும் சுத்தம் செய்ய உதவுகிறது.

வெங்காயம், உள்ளி, இஞ்சி கலந்த சூப்:
தேவையான பொருட்கள்;

2 பெரிய சிவப்பு வெங்காயம் (மெல்லியதாக வெட்டப்பட்டது)
1 உள்ளிப்பூடு ( நன்றாக் வெட்டப்பட்டது)
1 துண்டு – 2 அங்குல நீளமான இஞ்சி ( நன்றாக துருவிய )
1 சூப்கட்டி (ஸ்ரொக் கட்டி)

 

செய்முறை:
3 குவளை நீரினுள் மேற்கண்ட யாவற்றையும் சேர்த்து சூடாக்கவும். கொதிக்க தொடங்கும் பொழுது ஏறக்குறைய 2 குவளை அளவான நீர் வரும்வரையில் கொதிநிலையில் வைத்திருக்கவும். பின்னர் பரிமாறவும்.

வெங்காயம் கடுமையான சுவாசத் தொகுதி நோய்களை தவிர்ப்பதற்கு உதவக்கூடும். மேற்கண்ட சூப்பை உளுத்தங்கஞ்சியுடன் சேர்த்து எடுக்கும்போது எவருடைய சுவாசத் தொகுதி ஆரோக்கியத்துக்கும் நன்மைபயக்கும்.