Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)

Bleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்றுக்கான அறிகுறிகளாக தோன்றும். அது போன்று இவை சில கடுமையான நோய் நிலைகளுக்கும் தோன்றக்கூடும், உதாரணமாக- லுகேமியா- leukemia, இரத்தப்போக்கு- bleeding, இரத்தவட்டு கோளாறுகள்- platelet disorders.

Considerations – கருத்தில் கொள்ளவேண்டியவை
ஆரோக்கியமான ஈறுகளை பேணுவதற்கு பல் வைத்தியரை சந்தித்து அவரது அறிவுறுத்தல்படி பேணுதல் மிக நல்லது. ஒழுங்குமுறையற்ற பல் துலக்குதல் செயற்படுகள், மிகவும் கடினமாக பல் துலக்கல் மற்றும் தவறான flossing நுட்பம் என்பனவும் எரிச்சலூட்டுகின்றன. ஆகையால் இவற்றை சரியான முறையில் செய்தல் அவசியம்

காரணங்கள்
ஈறு வரியிலுள்ள பற்களில் பற்காறை குறைவாக/நீக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே ஈறுகளிலிருந்து இரத்தகசிவு ஏற்படுகின்றது. இது காலப்போக்கில் பல் ஈறு வீக்கம் அல்லது ஈறுகளில் அழற்சி போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.

தினமும் பல் துலக்குவதன் மூலமும், பல் மருத்துவ சிகிச்சையின் மூலமும் பற்காறைகள் நீக்கப்படவில்லையாயின் பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பு ( tartar ) என்று அழைக்கப்படும் பொருள் படிவு கடினமாகின்றது. இறுதியில் இது அதிகமான இரத்த போக்குக்கு வழிவகுப்பதுடன் அது மேலும் மேற்படிகிறது. Periodontal Disease என்று அழைக்கப்படும் தாடை எலும்பு நோய்க்கும் வழிவகுக்கிறது.

இரத்தப்போக்குடைய ஈறுகள் பின்வரும் வேறு சில காரணங்களாலும் ஏற்படுகின்றது.

 • வேறு இரத்த போக்கு நோய்
 • மிகவும் கடினமான பல் துலக்குதல் முறை
 • கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள்
 • காரணமறியப்படா திராம்போசைட்டோபெனிக் தோலடி (Idiopathic thrombocytopenic purpura)
 • தவறான முறையில் பொருத்தப்பட்டிருக்கும் பொய்ப்பற்கள்
 • ஒழுங்குமுறையற்ற flossing
 • பல்/ஈறு களில் ஏற்படும் தொற்றுக்கள்
 • லுகேமியா
 • சொறிகரப்பான் நோய் (Scurvy)
 • இரத்தத்தை தண்ணீயாக்கும் மருந்துகளின் பாவனை
 • வைட்டமின் k (கே) குறைபாடு

வீட்டு பராமரிப்புகள்
பற்காறை நீக்குவதற்காக குறைந்தது 6 மதங்களுக்கு ஒருமுறையேனும் பல் வைத்தியரை சந்திப்பது அவசியம். அத்தோடு உங்களது மருத்துவரின் வழிகாட்டலின் படி வீட்டில் செய்யவேண்டிய செயல்முறைகளை கையாளவேண்டியதும் அவசியம்.
மென்மையான, முள் மயிர் பல் துலக்கியின் உதவியுடன் ஒவ்வொரு முறையும் உணவருந்தியபின் பல் துலக்குதல் வேண்டும். அதுபோன்று உப்பு நீர்/ ஹைட்ரஜன் பெராக்சைடு/ நீர் பாவித்து கழுவுதல் வேண்டும். மற்றும் மோசமான பிரச்சனையைத் தரக்கூடிய வணிகரீதியான, ஆல்கஹால் கொண்டிருக்கும் வாய் கழுவும் திரவங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

நாளுக்கு 2 தடவைகள் Flossing செய்தல் பற் காறைகள் வளர்வதை தவிர்க்க முடியும், உணவுக்கிடைப்பட்ட நேரத்தில் கள்ளத்தீனிகள்/ சிற்றுண்டிகளை உண்ணுவதைத் தவிர்ப்பதோடு கார்போஹைட்ரேட்டுள்ள உணவுகளை உண்ணுவதை குறைக்கவும். இவை போன்று பின்வரும் சில சுகாதார கட்டுபாடுகளையும் பின்பற்றவும்.

ஈறுகளில் இரத்தப்போக்கை அதிகமாக்கக்கூடிய புகையிலை பாவனையை தவிர்க்கவும்.
ஐஸ்(குளிர்) நீரில் நனைத்த துணி அட்டைவதனால் நேரடியாக ஈறுகளில் அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் இரத்த போக்கை கட்டுப்படுத்தலாம்.

இது விற்றமின் சத்துக்களின் குறைபாடுகளால் நிகழ்கிறது என அறிந்தால், அந்த விற்றமின் குறைபாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட விற்றமின் குறைநிரப்பிகளை எடுக்க வேண்டும்.
மருத்துவர்கள் எடுக்குமாறு சிபார்சு செய்யாமல் ஆஸ்பிரின் எடுப்பதை தவிர்க்கவும்
ஏதும் மருந்துகளின் காரணமாக எரிச்சல் ஏற்ப்படுமாயின் அதற்கு பதிலான என்னொரு பதில்நிரப்பி மருந்து தருமாறு மருத்துவரை கேக்கவும், முக்கியமாக மருத்துவரது ஆலோசனை பெறாது மருந்துகள் மாற்றி பாவிக்கக்கூடாது.

உங்களது பொய் பற்கள் சரிவர பொருத்தபடா விட்டாலோ அல்லது உங்கள் ஈறுகளில் புண் புள்ளிகள் இருந்தாலோ பல் வைத்தியரை நாடுவது அவசியம்.

மூலிகை வைத்தியம்
Bleeding Gums பல வகையான மூலிகைகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கின்றோம். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கைக்கொண்ட பின் Bleeding Gums, முரசுகரைதல் போன்ற நிலைகள் காணப்படுமாயின் எங்களது மூலிகை வைத்தியரை நாடவும்.