Chronic Fatigue Syndrome (நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை)

CFS (Chronic Fatigue Syndrome) என்பது ஒரு நோயில்லை ஆனால் நோய் வருவதற்கான ஒரு அறிகுறியாகும். CFS க்கான அறிகுறிகள்:

V) தசைகள், மூட்டுகளில் வலி ஏற்படும்

 

V) பதட்ட நிலை காணப்படும் (கவலை)

V) மன அழுத்தம்

V) எவ் விடயங்களிலும் கவணம்செலுத்த முடியாமை

V) ஞாபக மறதி

V) காய்ச்சல்

V) தலையிடி

V) தாழ் குருதியழுத்தம்

V) உணவுக்கால்வாய் பிரச்சனைகள் அல்லது வலி

V) கோவப்படுதல்

V) சுற்றுச்சூழல் உணர்திறன்

V) மஞ்சற்காமாலை நோய்

V) பசியின்மை

V) மனநிலை மாற்றம்

V) தசைப்பிடிப்புக்கள்

V) மீண்டும் மீண்டும் சுவாசக்குழாயில் ஏற்படும் தொற்று

V) நாசி நெரிசல்

V) கண்டிடா தொற்று

V) ஒளி மற்றும் வெப்பத்தின் உணர்திறன்

V) சீரற்ற உறக்கம்

V) இரவில் வியர்த்தல்

V) தொண்டைப்புண்

V) சுரப்பிகளின் மாற்றம் (நிணநீர் கணுக்கள்)

V) அடிக்கடி வரக்கூடிய அதீத சோர்வு

V) நோய் எதிர்ப்பு திறன்  குறைபாடுகள்

நோய் எதிர்ப்புதிறன் குறைபடுகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

CFS ஐக் கண்டறிவது மிகவும் கடினம். CFS அறிகுறிகள் புளு(Flu), வேறு சில வைரஸ் தொற்றுக்களைப்போல் இருப்பதால் அதைக்கண்டறிவது கடினம். அது போன்று தன் உடலைப்பற்றிய கவலை, உளவலி நோய், மன அழுத்தம் போன்றும் இவை தவறாகக் கணிக்கப்படுகின்றன. ஏனெனில் மருத்துவ பரிசோதனையில் எதையும் கண்டுபிடிக்காத சமயத்தில் இந் நிலை ஏற்படுகின்றன. இவ் CFS  அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்கே மும்மடங்கு அதிகமாக ஏற்படுகின்றது. அதே போன்று 20-50 வயது பிரிவினரையே இது அதிகமாகத் தாக்குகின்றது.

CFS ஐ  விளங்கிக்கொள்வது மிகவும் கடினம். சில நிபுணர்கள் இது வைரஸ்களுடன் தொடர்புடையதாகக் கருதுகின்றனர். இது  ஹெஒபெஸ் வைரஸ் வகைகள் (herpesvirus family), மோனோநியூக்ளியசிஸ் (Mononucleosis), சிறுநீரக செயலிழப்பு, இறப்பைகுடல் தொற்றுக்கள் போன்றவற்றுக்கும் வழிவகுக்கும். இவை CFS ல் உள்ள பலருக்கு பொதுவான ஒன்றாகும்.  இவ்வாறான அறிகுறிகளைக் கொண்ட பலருக்கு அவர்களின் குருதியில் EBV அன்றிபொடிஸ்  அதிகமாகக் காணப்படும். சில நோயெதிர்ப்பு சக்தியின் தொளிற்பாடும், இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் வழி முறைகளும் இன்னமும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றது. அதே போன்று பின்வரும் காரணங்களும் CFS க்கு உரியதாகக் கருதப்படுகின்றன.

V) இரத்தச்சோகை

V) வலியுடைய மூட்டுவீக்கம்

V) பூச்சு பல்நிரப்புக்களிலிருந்து நாள்பட்ட பதார்த்த நச்சுக்கள்

V) இரத்தத்தில் சக்கரை குறைவு

V) தைரோயிட் சுரப்பி குறைபாடு

V) பங்கஸ் கண்டிடா தொற்றுக்கள்

V) தூக்கத்தில் பிரச்சனைகள்

மற்றும் அலர்ஜி, தைரோயிட் போன்றனவும் இதற்கு ஒரு காரணமாகின்றன.

இது வாழ்கை முறைக்குரிய ஒரு அச்சுறுத்தலாகும். இவற்றை முற்றாக குணப்படுத்த முடியாது. இவை எமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பழுதுபடுத்தவும் வழிவகுக்கும். இது சிலருக்கு தானாக தன்னிச்சையாகவே தோன்றும். ஒரு முறை இந்நிலை ஏற்படுமாயின் இது மீண்டும் எந் நேரமும் தோன்றக்கூடும். பொதுவாக மனஅழுத்தம், அல்லது மற்றுமொரு நோயைத்தொடர்ந்து இந்நிலை ஏற்படும். பின்வரும் அறிகுறிகளை  வைத்து CFS ஐ   வேறுபடுத்தி இனம்காணமுடியும்.

குறைந்தது ஆறு மதங்களுக்கு மேல் நீடிக்கும் தினசரி நடவெடிக்கைகளில் மாற்றம், ஓய்வெடுத்தும் மாறாத சோர்வு.

உளவியல் நோய் உட்பட்ட வேறு நீண்டகால நோய் நிலைகள்.

கருத்துக்கணிப்புக்களின் மூலம் USA ல் 4 மில்லியன் மக்களுக்கு மேலானோர் CFS ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை நீண்ட கால மனத்தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், சோர்வும் சராசரியான தினசரி வாழ்க்கை முறைக்கு   மிகவும் இடையூறாகக் காணப்படும்.